பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

இறை வணக்கத் தலங்களைப் பாதுகாப்பது பற்றியே அதிக ஆர்வமும் அக்கறையும் காட்டுவதை இறை மறையாகிய திருக்குர்ஆன் மூலம் அறிந்தின்புற முடிகிறது.

“அல்லாஹ் சில மனிதர்களை வேறுசில மனிதர்களைக் கொண்டு தடுத்து விலக்காதிருந்தால் மடாலயங்களும் மாதா கோயில்களும் யூத ஜெபாலயங்களும் அல்லாஹ்வின் திருநாமம் அதிகமதிகம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் தகர்க்கப்பட்டே போயிருக்கும்” (திருக்குர்ஆன் 22-40)

தொடக்கத்தில் முஸ்லிம்கள் உருவ வழிபாட்டை விடுத்து ஒரே இறைவனை மனத்தளவில் எண்ணி வணங்கும் இஸ்லாத்தின் ஏக தெய்வக் கொள்கையை ஏற்காத குறைஷிகள் முஸ்லிம்களைச் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாக்கினார்கள். ஏக தெய்வ இறை நம்பிக்கையிலிருந்து இம்மியும் பிசகாத முஸ்லிம்கள், பிறந்த மண்ணை விட்டு, சொத்து சுகங்களைத் துறந்து செல்ல நேர்ந்த போதும்கூட ஓரிறைக் கொள்கையை நிலை நாட்ட அனைத்துத் தியாகங்களையும் மனமுவந்து ஏற்றவர்கள் முஸ்லிம்கள், சிலை வணக்க உருவ வழிபாட்டாளர்களாகிய குறைஷிகளுக்கு அடுத்த நிலையில் யூத மதத்தவர்களும், கிருஸ்தவ வழிபாட்டாளர்களாக விளங்கியவர்கள் தாம். ஆயினும் கூட அவர்களின் வணக்கத்தலங்களின் பாதுகாப்புக்குக் கட்டியங் கூறுகிறது இஸ்லாமியத் திருமறை என்பது எண்ணத்தக்கதாகும். பல தெய்வ, சிலை வணக்க வழிபாட்டாளர்கள் தாங்களாக உணர்ந்து தெளிந்து ஏக தெய்வக் கொள்கையை ஏற்கும்வரை அவர்களது சமய உணர்வுகளை, வழிபாட்டுச் சமய சம்பிரதாயங்களை அவற்றிற்கு நிலைக்களனான வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என இஸ்லாம் போதிக்கிறது. இஸ்லாம் தவிர வேறு சமயங்கள் எதுவும் இத்தகைய