பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

161

உணர்வை, கட்டளையைப் பிறப்பித்துள்ளதாகத் தெரியவில்லை. பிற சமயச் சகிப்புத் தன்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் இதைவிடச் சிறந்த சான்றை உலக வரலாற்றில் காண முடியுமா?

முதலில் வந்த வேத சமயம் என்பதால் முதலிடத்தை யூத சமயத்திற்கும் இரண்டாவது வேதம் பெற்ற சமயம் என்பதால் கிருஸ்தவ மாதா கோயில்களுக்கும் இறுதியாக வந்த வேத மார்க்கம் என்பதால் இஸ்லாமிய மஸ்ஜிதுகள் மூன்றாவது இடத்தையும் பெறுகின்றன.

இந்த இறைக் கட்டளை பிறப்பிக்கப்பட்டகாலச் சூழலைக் கருத்திற்கொண்டு நோக்கும்போதுதான், இதன் கன பரிமாணம் எத்தகையது என்பதை நம்மால் உணர்ந்து தெளிய முடியும்.

அன்றைய யூத மத ஜெபாலயங்கள் செல்வவளம் மிக்கவைகளாகத் திகழ்ந்தன. பொன்னும் மணியும் குவிந்துள்ள கருவூலங்களாகவே விளங்கின. எனவே, இப்பொருள் வளங்களைக் கவர்வதற்காக இச் ஜெபாலயங்களைத் தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது வரலாறு தரும் தகவல்கள். அதேபோன்று அக்கால மடாலயங்களிலும் மாதா கோயில்களிலும் இளம் பெண்கள் ‘கன்னிகாஸ்திரீ’ களாகத் தங்கி இறைத் தொண்டில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. அத்துடன், செல்வச் செழிப்பும் கொண்ட மடாலயங்களையும் மாதா கோயில்களையும் தாக்கும் முயற்சிகள், தீயவர்களால் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டன. அத்தகைய செயல்கள் முஸ்லிம்களால் முறியடிக்கப்பட்டு, யூத மத ஜெபாலயங்களும் கிருஸ்துவ சமய மடாலயங்களும் மாதா கோயில்களும் காக்கப்பட்டன. 1450 ஆண்டுகட்கு முன்னதாக இஸ்லாத்தினால் கட்டிக் காக்கப்பட்டு நிலை நிறுத்தப்பட்ட இத்தகைய மதச்

11