பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/182

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180


இதை வலியுறுத்தும் வகையில் இத்தகைய நிலை ஏற்படா வகையில் அண்டை வீட்டார் எவ்வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பெருமானார் (சல்) அவர்கள் கீழ்க்கண்டவாறு தெளிவுபடுத்துகிறார்.

அண்டை வீட்டார் உம்மிடம் ஆதரவு வேண்டினால் அவரை ஆதரிப்பீராக! உதவிகோரினால் உதவி புரிவீராக! அவருக்குத் தேவை ஏற்பட்டால் உபகாரம் செய்வீராக! அவர் நோயுற்றிருந்தால் சென்று விசாரிப்பீராக! இன்னும் அவர் மரணமடைந்தால் அவர் ஜனாஸாவின் பின் செல்வீராக! அவருக்கு நன்மை ஏற்பட்டால் மனமாற வாழ்த்துவீராக! அவருக்குத் துன்பம் ஏதும் ஏற்பட்டால், அவரைத் தேற்றுவீராக! அவர் வீட்டுக் காற்றைத் தடுக்கும் முறையில் (உயரமான) கட்டடம் எழுப்பாதிருப்பீராக! நீர் ஒரு பழம் வாங்கும்போது அவருக்கும் (ஒரு துண்டு) அளிப்பீராக! நீர் (அவ்வாறு) செய்ய இயலாவிட்டால் உமது வீட்டிற்கு இரகசியமாகக் கொண்டு செல்வீராக! மேலும், அவருடைய குழந்தைகள் பெருமூச்சு விடும்படி உமது குழந்தைகள் அந்தப் பழத்துடன் வெளியேறாதிருக்கச் செய்வீராக!”

என்றெல்லாம் பெருமானார் அவர்கள் கூறுவதன் மூலம் ஒரு முஸ்லிம் தன் அண்டை, அயலார் மனம் எவ்வகையான பாதிப்புக்கும் ஆளாகாதவாறு கண்ணும் கருத்துமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

இவ்வாறு அண்டை வீட்டாரிடம் அழுத்தம் கொள்ளும் அன்புப் பிணைப்பு தெரு அளவில், பின்னர் ஊர் அளவில், அடுத்து நாட்டு அளவில் வளர்ந்தோங்கி உலக அளவில் நிலைபெறும் இத்தகு இனிய சூழ்நிலை அரசோச்சும்போது அற்பக் காரணங்களுக்காக உருவெடுக்கும் இனக்