பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185

நம்பிக்கையாளர்களின் நம்பிக்கைகளை மதிக்க வேண்டுமே தவிர, அவர்கள் மீது நம் நம்பிக்கைகளைத் திணிக்க முற்படக் கூடாது என்பதை அண்ணலெம் பெருமானார் அவர்கள் அழகுற உணர்த்திக் காட்டினார்.

அதுமட்டுமல்ல வழக்கு என்று வந்துவிட்டால் நீதியின் முன் அனைவரும் சமமானவர்கள் என்பதை எல்லா வகையிலும் மெய்ப்பிக்கும் வகையில் இச்சம்பவம் மூலம், ஒவ்வொரு சமயத்தினரும் தத்தமது சமயக் கொள்கை களைப் பகிரங்கமாக வெளிப்படுத்த பூரண உரிமை உண்டு என்பதை உலகுக்குணர்த்திக் காட்டினார்கள் பெருமானார் (சல்) அவர்கள்.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய மற்றோர் சிறப்பம்சம் நபிமார்களுக்கிடையே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற தார தம்மியமில்லை. அனைவரும் சமமானவர்களே என்பதை உணர்த்தவே அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி பெருமானார் அவர்கள் ‘மூஸா (அலை) அவர்களைவிட என்னை சிறப்பாக்காதீர்கள்’ என்று கூறினார்கள்.

மதச் சுதந்திரம் அடிப்படை உரிமை

ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமைகளுள் ஒன்று தன் விருப்பம்போல் தான் விரும்பி ஏற்றுள்ள சமயத்தைப் பின்பற்றியொழுகும் உரிமையாகும். ஒரு சமயத்தைப் பின்பற்றி, அதன் சட்டதிட்டங்களின்படி வாழும் ஒருவரை எக்காரணம் கொண்டும் அவ்வாறு ஒழுகுவதினின்றும் தடுப்பதோ அல்லது நேர்முகமாகவோ அன்றி மறைமுகமாகவோ கட்டாயப்படுத்த முற்படுவதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது.

“மார்க்க விஷயத்தில் எவ்விதக் கட்டாயமும் இல்லை”

என்ற திருமறை வாக்கிற்கிணங்க ஒரு முஸ்லிம் மாற்றுச்