பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/191

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189

திருக்க முடியும். கட்டாயப்படுத்தி அல்லது அத்தகு சூழலை ஏற்படுத்தி இஸ்லாத்தில் இணையத் தூண்டியிருக்கலாம். ஆனால், எதையுமே செய்யாது மன்னித்த பெருமானார், முந்தைய சமயத்திலேயே ஸப்வானைத் தொடர அனுமதித்ததோடு, போர்க்களத்தில் பரிசும் அளிக்க முன் வந்தார் பெருமானார்.

இறை வாக்கையும் பெருமானார் பெருவாழ்வையும் வாழ்க்கையின் இரு கண்களாகக் கொண்டு பேணிவரும் முஸ்லிம்கள் வாளால் இஸ்லாத்தைப் பரப்பினர் எனக் கூறுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பான புரட்டு வாதமாகும்.

இறைவன் நாடியிருந்தால் ஒரு விநாடியில் அத்துணை மனிதர்களின் மனத்துள்ளும் இஸ்லாமிய உணர்வைப் பாய்ச்சி உலகிலுள்ளோர் அனைவரையும் முஸ்லிம்களாக்கியிருக்க முடியுமே, ஏன் அவ்வாறு நிகழவில்லை. தன்னால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதரும் தன்னைப் பற்றியும் தாங்களாகவே சுய உணர்வோடு சிந்தித்து தெளிந்து இஸ்லாத்தின்பால் இணைவதையே இறைவன் பெரிதும் விரும்புகிறான். இதே கருத்தைத்தான் தன் நபியை நோக்கிக் கூறுவது போல் திருமறையில்,

“(நபியே!) உம் இறைவன் விரும்பியிருந்தால், பூமியில் உள்ள அனைவருமே ஒன்றுபட்டு நம்பிக்கையாளர்களாகியிருப்பார்கள. (எனவே) மனிதர்கள் (யாவருமே) நம்பிக்கையாளர்களாகி விட வேண்டுமென்று அவர்களை நீர் நிர்ப்பந்திக்க முடியுமா” (திருக்குர்ஆன் 10:99)

இதே போன்ற மற்றொரு இறைவசனமும் திருமறையில் காணப்படுகிறது.

“நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக் கூடிய