பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/195

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193


எதிரி மதக்காரர்களான தாங்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்த போதிலும் முன்னர் குறைஷிகளின் பெரும் படை சிறு தொகையினரான முஸ்லிம்களிடம் தோல்வி கண்டு வந்ததை நினைவுகூர்ந்து ஒப்பந்தம் செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தனர். ஒப்பந்தம் செய்து கொள்ள உர்வா என்பவரை குறைஷிகளின் சார்பில் அனுப்பி வைத்தனர்.

ஒப்பந்தப் பேச்சு வார்த்தைகள் இரு சாராருக்கு மிடையே நடைபெற்றன. மாற்றுச் சமயத்தவரிடம் எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு விட்டு கொடுத்து சமரச ஒப்பந்தம் காண விழைந்தார் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள். இறுதியில் ஒப்பந்தமும் எழுதப்பட்டது. ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் மாற்றுச் சமயத்தவர்களான மக்கா குறைஷிகளுக்குச் சாதகமாகவும் முஸ்லிம்களுக்குப் பாதகமாகவுமே எழுதப்பட்டிருந்தன. அவையாவன:

(1) இம்முறை முஸ்லிம்கள் ஹஜ் புனிதப் பயணக் கடமை களை மக்காவினுள் நுழைந்து நிறைவேற்றிக் கொள்ளாமல் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றுவிட வேண்டும்.

(2) அடுத்த ஆண்டில் அவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை நிறைவேற்ற மக்காவினுள் வரலாம். ஆனால், மூன்று நாட்களுக்கு மேல் மக்காவில் தங்கியிருக்கக் கூடாது.

(3) தற்போது மக்காவாசிகளுள் முஸ்லிம்கள் எவரும் காணப்படின், அவரை மதீனாவுக்கு அழைத்துச் செல்லக் கூடாது; மதீனாவிலிருந்து வந்திருப்பவருள் எவராவது இஸ்லாத்தைக் கைவிட்டால், தாராளமாக இப்போதே மக்காவுக்குள் வரலாம்.

(4) மக்காவாசி யாராவது மதம் மாறி இஸ்லாத்தை ஏற்று மதீனாவுக்குப் புகலிடம் தேடி ஓடி வந்தால், முஸ்லிம்

13