பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/204

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

இதுபோன்ற சான்றுகள் எண்ணற்றவை வரலாறு நெடுக உண்டு.

கிருஸ்தவர்களுடன் உடன்படிக்கை

பெருமானார் அவர்கள் அகழ்ப் போருக்கும் ஹுதைபியா உடன்படிக்கைக்கும் இடையே ஸீனா மலையில் இருந்த காதரின் மடத்திலிருந்த கிருஸ்தவ பாதிரிமார்களிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்த ஷரத்துகள் சமய நல்லிணக்க உணர்வுக்குக் கட்டியங் கூறுவனவாக அமைந்துள்ளன. அவைகளில் சில:

🌑 கிருஸ்தவ பாதிரிமார்களில் எவரேனும் பிரயாணம் செய்யும் பொழுது மலை மீதோ குன்றின்மீதோ, கிராமத் திலோ, மக்கள் வாழும் வேறு இடத்திலோ கடலிலோ, பாலைவனத்திலோ, சந்நியாசி மடத்திலோ, மாதா கோவிலிலோ, இறை வணக்கம் செய்யுமிடத்திலோ இருப்பாரானால், அவர்களையும் அவர்களுடைய பொருட்களையும் பாதுகாக்க நானும் என் எல்லா மக்களும் அவர்களுக்கு எல்லா உதவியையும் செய்வோம். ஏனென்றால், அவர்களெல்லாம் என்னுடைய மக்களில் ஒரு பகுதி ஆவர். மேலும், அவர்களால் எனக்குப் பெருமை உண்டு.

🌑 கிருஸ்தவர்களுடைய நீதிபதிகளையும் ஆளுநர்களையும் மாற்றவும் நீக்கவும் முஸ்லிம் உத்தியோகஸ்தர்களுக்கு உரிமை கிடையாது. அவர்கள் அனைவரும் விலக்கப்படாமல் அந்தந்த உத்தியோகத்தில் இருப்பார்கள்.

🌑 அவர்களுடைய மாதா கோயில்கள், சந்நியாசி மடங்கள் அல்லது மதசம்பந்தமான வேறு விஷயங்களில் கிருஸ்தவர்களுக்கு உதவி தேவையாக இருந்தால் அவர்களுக்கு முஸ்லிம்கள் உதவிசெய்ய வேண்டும்.

சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழும் பகுதியில் சிறுபான்மையினரான கிருஸ்தவர்கள், யூதர்கள் எவ்வாறு