பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203

சமத்துவமாகவும் தக்க பாதுகாப்போடும் வாழ பெரும்பான் மையினர் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு பெருமானார் வழிமுறைகள் இலக்கணமாகவே அமைந்துள்ளதெனலாம்.

பிற சமயத்தவரின் அபகாரத்திற்கு
உபகாரம் செய்த பெருமானார்

சிலை வணக்கச் சமயத்தவர்களான மக்கா குறைஷிகள் அண்ணலாருக்கும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களுக்கும் செய்த அக்கிரமங்கள், அபகாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. பிறந்த மண்ணை விட்டே விரட்டியடித்தனர். மதீனா சென்ற பிறகும் விடாமல் பெருமானாரோடு போரிட்டு அழிக்க முயன்றனர்.

இந்நிலையிலும் மக்கா குறைஷிகளுக்கு வேண்டிய மிக முக்கிய உணவுப் பொருளான கோதுமையை தவறாது அனுப்பிவந்தவர் எமாமா மாநிலத்தைச் சேர்ந்த துமாமா எனும் முஸ்லிமாவார். குறைஷிகளின் அக்கிரமப் போக்குகள் அதிகரித்தபோது மக்காவுக்கு அனுப்பிவந்த கோதுமையை தொடர்ந்து அனுப்பாது நிறுத்திவிட்டார். இதனால் மக்காவில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட கடும் பஞ்சம் தலை தூக்கியது. குறைஷிகள் எவ்வளவோ முயன்றும், துமாமா கொடிய குறைஷிகளுக்குக் கோதுமை தரமறுத்துவிட்டார். பசியாலும் பட்டினியாலும் துவண்டு போன மக்கா குறைஷிகள் வேறு வழியில்லாமல் பெருமானாருக்குத் தூதனுப்பி துமாமாவைத் தொடர்ந்து கோதுமை அனுப்பி பஞ்சம் போக்குமாறு வேண்டினார்.

மாற்றுச் சமயத்தவர்களான குறைஷிகள் செய்த கொடுமைகளையெல்லாம் நாயகத் திருமேனி கொஞ்சமும் நினைவிற் கொள்ளாமல், பகைவர்க்கருளும் அன்பு உள்ளத்தோடு துமாமாவுக்கு ஆள் அனுப்பி வழக்கம்போல் மக்கா