பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

குறைஷிகளுக்குத் தொடர்ந்து கோதுமை அனுப்பியுதவு மாறு செய்தார். அதன்மூலம் மக்கா வாழ் குறைஷி களிடையே நிலவிய கொடிய உணவுப் பஞ்சமும் நீங்கிற்று.

அண்ணலார்ளா வாளாவிருந்திருந்தால் துமாமா எதிர்பார்த்தபடி பஞ்சத்தின் கொடுமை தாளாத குறைஷி மக்கள் திருந்தி முந்தைய சிலை வணக்கச் சமயத்தைவிட்டு விட்டு இஸ்லாத்தின்பால் வந்திருக்கவோ அல்லது முஸ்லிம்கள் மீது கொண்டிருந்த பகையுணர்வைக் குறைத்துக் கொள்ளவோ முடியும். அதற்கான வளமான வாய்ப்பு இருந்தும், அதை ஏற்க பெருமானார் சிறிதும் விரும்பவில்லை. இத்தகைய செயலும் ஒருவகையான மறைமுகக் கட்டாயமேயாகும் என எண்ணினார். “இஸ்லாத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை” என இறைவனே திருமறையில் கூறியிருக்கும்போது நாயகத் திருமேனி அவ்வழியை எப்படி ஏற்பார்? மனிதாபிமான நிறைகுடமான நாயகத் திருமேனி முஸ்லிம்- முஸ்லிமல்லாதார் என்ற உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலையில் எல்லோரையும் ஒன்றாகக் கருதி செயல்பட்டு இறைநெறிக்கு இலக்கணமாயமைந்தார்.

பாதிரியார்கள் பெற்ற பெருமதிப்பு

அண்ணலாரின் அடிச் சுவட்டைப் பின்பற்றி ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் பிற சமயத்தவர்களின் சமய, சமுதாய உரிமைகளைப் பேணிக் காப்பதில் எப்போதும் பெரும் கவனம் செலுத்தினர் என்பதற்கான சான்றுகளை வரலாறு நெடுகக் காண முடிகிறது.

கான்ஸ்டான்டிநோபிளை வெற்றி கொண்ட துருக்கிப் பேரரசர் இரண்டாம் முஹம்மது, தம்மை கிரேக்ககிருஸ்தவ சமுதாயத்தின் பாதுகாவலர் என அறிவித்தார். அதற்கிணங்க போப்பாண்டவரின் ஆதிக்கத்திற்குட்படாத கிருஸ்தவர்களுக்குத் துளியளவு தொல்லைகூட யாரும் தரக்