பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

213

விளக்குகிறார் விவேகானந்தர். ஹிந்து சமய மறுமலர்ச்சிக்கென புது இயக்கம் கண்ட விவேகானந்தர் தமது எதிர்கால இந்தியா எனும் நூலில்,

“ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் முஸ்லிம் ஆட்சி சுதந்திரம் அளித்தது. அதன் காரணமாகத் தான் நம் மக்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முஸ்லிம்களானார்கள். கத்தியும் நெருப்பும் கொண்டே இம்மத மாற்றம் அனைத்தும் நடந்தது என நினைப்பது பைத்தியக்காரத்தனம்.

மேலும் இத்தகைய கருத்தை வெளிப்படுத்துவோரை நையாண்டியுணர்வோடு “நான் மலையாளத்தில் பார்த்ததை விட முட்டாள்தனமான விஷயம் உலகில் எங்கேயாவது உண்டா? தாழ்த்தப்பட்டவர்கள், மேல் சாதியினரின் தெருக்களில்கூட நடக்க அனுமதிக்கப்படவில்லை... தாழ்த்தப்பட்டவர்கள் நம் (ஹிந்து) குழந்தைகளாக இருக்கும்வரை பட்டினி போட்டுச் சாகடிக்கிறோம். அவர்கள் மதத்தை மாற்றிக் கொண்டவுடன், அவர்களுக்கு விருந்து போடுகிறோம் என்றால், இதைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு உண்டா? இந்த வெட்ககரமான சாதி வித்தியாசங்கள் அறவே ஒழிய வேண்டும்” எனத் தன் கால சமூக நிலையை ஆழ்ந்த வருத்தத்துடன் வெளிப்படுத்தியுள்ளார் விவேகானந்தர்.

ஏற்றத் தாழ்வுமிக்க இந்நிலையை மாற்ற பக்தி இயக்கப் பெரியார்கள் மேற்கொண்ட நிலையையும் அதற்கு இஸ்லாமிய நெறியில் ஆட்சி செய்த முஸ்லிம்களின் ஆட்சி எந்த அளவுக்கு உறுதுணை செய்தது என்பதையும் குறிப்பிடும்போது,

“சங்கரருக்குப் பிறகு இராமனுஜர் தோன்றினார். சங்கரருடைய புத்தி அதிநுட்பமானது; ஆனால், அவருடைய இருதயம் அவ்வளவு விசாலமானதாக இருக்கவில்லை.

15