பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/217

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

215

மன்னர்கள் ஹிந்து அன்னையர்களுக்குப் பிறந்தவர்கள்தாம்...” எனக் கூறுவதிலிருந்து இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் யாரும் ஹிந்து சமய விவகாரங்களில் தலையிடவில்லை என்பதும் ஹிந்து சமய பக்தி இயக்கங்கள் தோன்றவும் அதன் செயல்பாடுகள் வெற்றி பெறவும் பெருந்துணையாய மைந்தனர் என்பதும் தெளிவாகிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில்,

“இந்தியாவில் முஸ்லிம்களிடையே ஏழை எளிய மக்கள் அதிகமாக இருப்பதற்குக் காரணம் என்ன? வாள் கொண்டு மதமாற்றம் செய்தார்கள் என்பது அறிவீனமாகும். புரோகிதர்களிடமிருந்தும், பண்ணையார்களிடமிருந்தும் விடுதலை கிடைக்கும் பொருட்டே ஏழை எளிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவி இருப்பார்கள் என்று தோன்றுகிறது,” எனக் கூறுவதோடமையாது அதற்கான சிறப்புக் காரணத்தையும் கண்டறிந்து கூறுகிறார் விவேகானந்தர்,

“இனத்தையும் நிறத்தையும் கடந்து முஸ்லிம்கள் காட்டுகின்ற, கடைப்பிடிக்கிற முழுமையான சமத்துவத்திலேதான் இவர்களின் சிறப்பு இருக்கிறது.”

விவேகானந்தரின் இக்கருத்துகள் இஸ்லாமிய மார்க்கத்தின் வெற்றி ரகசியங்களை, முஸ்லிம்களின் சமய உணர்வுக்கப்பாலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மனிதாபிமான செயற்பாடுகளையும் உணர்த்துவதாயுள்ளது.

தேசியப் பண்பாடும் சமயப் பண்பாடும்

கலை, கலாச்சாரத்தன்மைகளை உட்கொண்ட ஒன்றே ‘பண்பாடு’ என அழைக்கப்படுகிறது. சமயப் பண்பாடு என்பது அவரவர் பின்பற்றும் சமய ஆச்சாரத்தின் அடிப்படையில், ஆன்மீக உணர்வூட்டமாக அமைந்துள்ள ஒன்றாகும். தேசியப் பண்பாடு என்பது சமயச் சடங்கு முறைகளுக்கும்