பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

பண்பாடு-பின்பற்றப் படவேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ‘ஹிந்துயிஸம்’ வேறு, இந்துத்துவம் வேறு. ‘ஹிந்துயிஸம்’ மதத் தொடர்பான கொள்கை, கோட்பாடு. ‘இந்துத்துவம்’ என்பது மத நெறியல்ல, அரசியல் போக்கு. ஒலிச்சாயலைப் பயன்படுத்திச் செய்யப்படும் குழப்பம். இந்தியா பல இனங்களையும் மொழிகளையும் மதங்களையும் கலை, பண்பாடுகளையும் கொண்ட மிகப்பெரிய நாடு. இவையனைத்தையும் ஏற்றிப் போற்றி மதிப்பதில்தான் இந்திய ஒற்றுமையின் உயிரோட்டமே அடங்கியுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட தங்களைக் கொண்ட எந்த நாட்டிலும் இருவகைப் பண்பாடுகள் இருப்பது இயல்பு. ஒன்று சமயங்கடந்த நிலையில் அனைவருக்கும் பொதுவான சமுதாயப் பண்பாடு. மற்றவை அந்தந்த சமயச் சூழலுக்குள் உருவாகி நிலை பெற்றிருக்கும் சமயப் பண்பாடு. இந்தியாவைப் பொருத்தவரை பாரதப் பண்பாடு சமுதாய வீதியில் உலவும் அனைத்துச் சமயத்தவர்க்கும் பொதுவான சமுதாயப் பண்பாடு. இது சமயச் சார்பற்றது. இந்துத்துவம் என்ற பெயரில் ஹிந்து சமயச் சார்பான ஹிந்துயிஸப் பண்பாட்டை ஒரே பண்பாடாகக் கொண்டு எல்லோரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துவது எல்லா வகையிலும் இந்திய ஒற்றுமைக்கு ஊறுபாடாகவே அமைய முடியுமே தவிர உதவிகரமாக அமையவே முடியாது என்பது வரலாறு புகட்டும் உண்மை. இந்தியாவின் பல்வேறு இன, மொழிகளையும் அனைத்துச் சமயங்களையும் அதன் அடிப்படையிலான கலை, பண்பாடுகளையும் நேசிப்பதன் மூலம், மதிப்பதன் வாயிலாகவுமே இந்திய ஒற்றுமையை வலுப்படுத்த முடியும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி. இதற்கேற்ப வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயர் பண்பு நெறியை போற்றி வளர்க்க முற்பட