பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25


இஸ்லாமிய நெறியும்
இந்திய முஸ்லிம் மன்னர்களும்

அறுநூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை முஸ்லிம் மன்னர்கள் ஆண்டதாக வரலாறு கூறுகிறது. அவர்கள் நாடாளும் மன்னர்கள் என்ற அளவில் இந்தியாவில் அரசோச்சியுள்ளார்களே தவிர, தாங்கள் சார்ந்த இஸ்லாமிய நெறியைப் பரப்ப பெரும் முயற்சிகள் எதையும் செய்தார்கள் என்பதற்கு வலுவான சான்றுகள் எதையும் வரலாற்றில் காண முடியவில்லை.

இன்னும் சற்று நெருக்கமாக, அவர்கள் சமய வாழ்வை நுணுகிப் பார்த்தால், ஒரு சாதாரண முஸ்லிம், ஒரு சராசரி இஸ்லாமியன் நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள, ‘ஐம்பெரும் கடமை’களைக்கூட முழுமையாக நிறைவேற்றினார்கள் என்று கூறமுடியவில்லை. அரசு கட்டில் ஏறிய பெரும்பாலான முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமிய நெறிப்படி வாழ்ந்தார்கள் என்றுகூடத் துணிந்து கூற முடியவில்லை. எல்லாவகையிலும் இஸ்லாமிய நெறிப்படி வாழ முனைந்த சக்கரவர்த்தி ஒளரங்கஸீப் ஆலம்கீர், இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில், வசதி படைத்தவர்கட்குக் கட்டாயக் கடமையாக அமைந்த ‘ஹஜ்’ கடமையை இறுதிவரை நிறைவேற்றாமலேயே மறைந்தார் என்பதுதான் வரலாற்று உண்மை.

இஸ்லாமிய ஒளி ஏற்றிய ஞானிகளும் சூஃபிகளும்

ஆழ்ந்து நோக்கின் இஸ்லாமிய நெறியை சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்றவர்கள், அவர்களிடையே எடுத்துக் கூறி விளக்கி மனதில் பதிந்து நிலைபெறச் செய்தவர்கள் இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் செல்வர்களாகிய சூஃபிகளும் மார்க்க ஞான மேதைகளுமே யாவர். பிற சமயத்தவர்கள் மத்தியில் இஸ்லாமிய ஞானச் செல்வர்கள்