பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33


அவரவர் தாய் மொழியில் இறைவேதம்

உலகெங்கும் உள்ள ஒவ்வொரு இனத்துக்கும் வகுப்புக்கும் எனத் தோன்றிய இறை தூதர்கட்கு இறை வழிகாட்ட மறைமொழி வழங்கிய இறைவன், அவற்றை அவரவர் தாய்மொழியிலேயே வழங்கினான் என்பதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்தியம்புகிறது.

“(நபியே!) ஒவ்வொரு தூதரும் (தம் மக்களுக்கு) தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம்.” (திருக்குர்ஆன்:14-4)

என இறைவன் தன் திருமறையில் தெளிவாகக் கூறியிருப்பதிலிருந்து மண்ணுலக மக்களுக்கு இறைநெறி உணர்த்தி நேர்வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு அவரவர் தாய்மொழியிலேயே இறை வேதங்கள் அருளப்பட்டன என்பது உறுதிப்படுகிறது. இவ் வகையில் பலப்பல இறை தூதர்கள் - தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கலாம். அவர்கட்கு இறை வேதங்களும் அவரவர் மொழியில் அருளப்பட்டிருக்க முடியும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில் பழம்பெரும் மொழியான தமிழிலும் இறை வேதங்கள் வல்ல அல்லாஹ்வால் வழங்கப்பட்டிருக்கலாம் என எண்ணுவதில் தவறிருக்க முடியாதல்லவா?

மனிதர்களிலிருந்தே இறைதூதர்கள்

இறைவனால் மக்களுக்கு வழிகாட்ட அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் பற்றி ஹிந்து சமயம் கூறுவது என்ன?

‘இறைவன் தன் தீர்க்கதரிசிகளை மனிதர்களிலிருந்தே தேர்ந்தெடுத்துள்ளான். ஏனெனில் இறைவனது சிறப்பையும் அவன் வேதத்தையும் இறைவனின் அருட்கொடையாக

3