பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

தன்மை மிக்க உலகச் செம்மொழிகளில் (Classical Languages) ஒன்றாகத் திகழ்கிறது. அரபு நாடுகளின் ஆட்சி மொழியாகவும் கல்வி நிலையங்களில் பயிற்சி மொழியாகவும் கோடிக்கணக்கான மக்களின் பேச்சு வழக்கு மொழியாகவும் திகழ்ந்து வருகிறது. மறை மொழி என்ற நிலையில் அரபி மொழி அறிந்த மக்கள் உலகெங்கும் நூறு கோடிக்கு மேல் பரவியுள்ளனர். உலகில் அரபி மொழிக்குக் கிடைத் துள்ள இப்பெருமைமிகு சிறப்பு வேறு எந்தவொரு மொழிக்கும் வாய்க்கவில்லை என்றே கூறலாம்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டங்களில் இறைத்தூதர் மூலம் இறைவன் அளித்த வேதங்களில் பல மறைந்து போயின என்பது வியப்புக்குரிய செய்தியன்று. அப்படியே இருப்பனவாகக் கூறப்படும் வேதங்களும்கூட முழு வடிவில் இல்லை. அரைகுறையாகக் காணப்படும் அவற்றிலும் ஏராளமான இடைச் செருகல்கள். எது இறைவாக்கு, எது இடைச் செருகல் எனக் கண்டறிய வியலாநிலையில் ஏராளமான கலப்படச் சமாச்சாரங்கள்!

போகட்டும், வரலாற்றிற்குப் பிந்திய கால கட்டங்களில் இறைத்தூதர்கள் மூலம் இறைவனால் வழங்கப்பட்ட இறைவேதங்களாவது வழங்கப்பட்ட வடிவிலேயே இருக்கின்றனவா என்றால், அங்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. வரலாற்றுக்குப் பிந்தி வந்த வேதங்களில் திருக்குர் ஆன் தவிர்த்து அனைத்து வேதங்களும் மாற்ற திருத்தங்கட்கு உட்பட்டனவாகவே உள்ளன. அசல் வடிவில் இல்லாத அவற்றில் வேத விற்பன்னர்கள் தங்கள் விருப்புவெறுப்புகளுக்கேற்ப மாற்ற திருத்தங்களை இவ்வேதங்களில் இடைச் செருகலாக ஏற்படுத்தத் தவறவில்லை. இதனால் இறை வாக்குகளை காலப்போக்கில் மறந்து விட்டனர் என்றே கூற வேண்டும். இதையே திருமறை,