52
ஒரே பரம் பொருளைப் போதிப்பதையே நியதியாகக் கொள்ள வேண்டும்” என்று போதித்துள்ளார். அத்துடன் “பல பரம்பொருள் உண்டென்று ஒரு மதம் கூறுமானால் அது மதமல்ல” என்றும் தீர்மானமாகக் கூறியுள்ளார். பிரஹ்மாவின் ஏகத்துவக் கொள்கை
ஹிந்து சமயம் “பிரஹ்மா” என அழைக்கும் இறைதூதர் தன் சந்ததிகளுக்கு உபதேசமாகக் கூறுவனவற்றுள் குறிப்பிடத்தக்க உபதேசமாக கீழ்க்காணும் போதனை அமைந்துள்ளது.
“இறைவன் உங்களுக்காக ஒரு பரிசுத்தமான மார்க்கத்தை குறிப்பிட்டிருக்கிறான். ஆகவே, நீங்கள் அம்மார்க்கத்திலேயே ஸ்திரமாக இருந்து மரணமடையும் போது ஏக தெய்வ வழிபாட்டிலேயே மரிக்க வேண்டும்; இறைவனுக்கு எதையும் ஒப்பாக்கி வணங்காதீர்கள்” என்பதாகும்.
(ஹிந்து தர்மம் பக். 112)
இறைவனை அறிவதே ‘பிரம்ம வித்தை’
மேலும், தன் சீடர்களுக்கு உபதேசிக்கும் கௌதம மகரிஷி, அவர்களை நோக்கி, “இப்பொழுது உங்களுக்கு மிகப் பெரிய வித்தையொன்று கற்றுக் கொடுக்கப் போகிறேன். அதுதான் மனிதன் பிறவாமல் இருப்பதற்கு வழிகாட்டும் கல்வியாகும். ‘பிரம்ம வித்தை’ என்று அதற்கு பெயர். அதாவது, நாம் அனைவரும் இறைவனின் குழந்தைகள். நமது தந்தை அவரே; தாயும் அவரே; அவரே அம்மையப்பரும் ஆவார். அவரை அறிந்து கொள்வதே-அவரைப் பற்றிய அறிவைப் பெறுவதே பிரம்ம வித்தையாகும்” எனக் கூறியுள்ளார்.