பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வாழ்ந்தபோதே குறித்து வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனினும், இறுதி இறைத் தூதரான நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் இறைச் செய்தியும் அவரது தோழர்களால் அவ்வப்போதே பதிவு செய்யப்பட்டன. உறுதி செய்யப்பட்டன. இறைவனால் நபிகள் நாதர் மூலம் வெளிப்படுத்தப்பட்ட திருமறைச் செய்திகள் உடனுக்குடன் பலராலும் மனனம் செய்யப்பட்டதோடு ஓடுகள், ஈச்சமரப் பட்டைகள், எலும்புகளின் மீதும் தெளிவாக எழுதி வைக்கப்பட்டன. அண்ணலார் காலத்திலேயே இறைச் செய்திகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டன.

பெருமானார் அவர்கள் தனக்கு முன்னர் வந்த இறைத் தூதர்களின் வாழ்வும் வாக்கும் மாற்ற திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டதுபோல் தனக்கும் நேரிட்டுவிடக் கூடாது எனக் கருதினார்களோ என்னவோ, அதைப்பற்றி மிக அழுத்தமாக,

“எனக்குப் பின்னர் என் மீது உள்ள அன்பாலும் ஆர்வத்தாலும் நான் கூறாததைக் கூறியதாகவோ செய்யாததைச் செய்ததாகவோ யாரேனும் கூறினாலோ எழுதினாலோ அவர்கள் என்னைச் சார்ந்தவராக மாட்டார்கள். அத்தகையவர்கள் இறைவனின் கொடுந்தண்டனையிலிருந்து தப்பவும் முடியாது.” எனக் கடுமையாக எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். எனவே, அன்பு மிகுதியினாலோ வேறு காரணங்களாலோ மாநபி வாழ்வும் வாக்கும் இன்றும் உள்ளது உள்ளவாறே அமைந்து உலக மக்களுக்கு வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்கி வருகிறதெனலாம்.

அத்துடன் இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் திருமறையும் நாயகம் (சல்) அவர்களின் காலத்திலேயே