பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

முழுமைப்படுத்தப்பட்டு, முறையாகத் தொகுக்கப்பட்டு விட்டது. மூன்றாவது கலீஃபா உதுமான் (ரலி) காலத்தில் திருத்தப் பதிப்பாகச் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், முந்தைய வேதங்கள் பலவற்றில் செய்யப்பட்டதுபோல் மாற்ற, திருத்தங்களுக்கு இடமேயில்லாமற் போய்விட்டது. அன்றிலிருந்து இன்றுவரை யாராலும் திருத்தபடா திருமறையாகவே திருக்குர்ஆன் விளங்கி வருகிறது.

அனைத்து வேதங்களுக்கும் மூலவேர் ஒன்றே!

இதுவரை நாம் கண்ட இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளின் அடித்தளம் உலகச் சமயங்கள் அனைத்தின் அடித்தளமாக அமைந்திருப்பதிலிருந்து உலகத்துச் சமயங்கள் அனைத்தும், அவற்றின் வேதங்கள் அத்தனையும் இறை தூதர்கள் மூலம் காலந்தொறும் மக்களுக்கு வழங்கப் பட்டுள்ளன என்பது போதரும். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளின் வரன்முறையான கோட்பாடுகள் மட்டுமே பிற சமயங்களிலிருந்து இஸ்லாத்தைச் சற்றே வேறுபடுத்திக் காட்டுகின்றன என்பது தெளிவு.

பரம்பொருள் ‘அல்லாஹ்’ அனைவர்க்கும் இறைவனே

‘அல்லாஹ்’ எனும் அரபிச் சொல் பன்னெடுங்காலமாக அரபி மொழியில் ஏக இறைவனைக் குறிக்கும் சொல்லாக வழங்கி வருகிறது. ஹிந்து மதத்தில் கடவுள்களாக கருதப்படும் ஒவ்வொரு விக்ரத்துக்கும் ஒரு தனிப்பெயர் வழங்கி னும் எல்லாக் கடவுளர்க்கும் மேலான பெயராக ‘ஏகப் பரம் பொருள்’ என்ற சொல் வழங்கி வருகிறது. அதேபோன்று கிருஸ்தவ சமயத்தில் ஏசு, மேரி எனப் பல பெயர்கள் கடவுளர்களைக் குறிக்க வழங்கினும் அவற்றிற்கெல்லாம் மேலானதாக கர்த்தர் என்ற சொல்லாலேயே பரம்பொருள்