பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65



இறைவனே குருவான விந்தை

முந்தைய இறை தூதர்களிலிருந்து இறுதித் தூதரான நபிகள் நாயகம் (சல்) அவர்களை வேறுபடுத்திக் காட்டும் தனித் தன்மைகள் பல உள. அவற்றுள் ஒன்ற இறைவனே அண்ணலாருக்குக் குருவாயமைந்த பான்மையாகும்.

பெருமானார் தம் வாழ்வின் இறுதிவரை எழுதப் படிக்கத் தெரியாதவராகவே இருந்தார். தம் பெயரைக் கூட எழுத்தால் எழுதக் கற்றாரில்லை. இவரைப் பற்றி திருக்குர் ஆன் குறிப்பிடும்போது ‘உம்மீ’ (எழுதப் படிக்கக் கற்காதவர்) என்றே குறிப்பிடுகிறது.

நாயகத் திருமேனிக்கு இளமைப் பருவத்தில் அடுத்தடுத்து தாய், தந்தையரை இழந்ததனாலும் வறுமைச் சூழலில் ஒட்டகம் மேய்ப்பவராக இருந்ததனாலும் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் வசதியும் இவருக்கு இல்லாமற் போய்விட்டது.

இதற்கெல்லாம் மேலாக இவர் எழுதப் படிக்கக் கற்காததற்கு இறை நாட்டம் வேறு விதமாக இருந்திருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

சாதாரணமாக ஒருவர் எழுதவும் படிக்கவும் கற்க விரும்பினால் அவற்றை அவருக்குக் கற்பிக்க ஒரு ஆசிரியர்-குரு- கட்டாயமாக இருக்க வேண்டும். குரு இல்லாமல் எழுதப் படிக்கக் கற்பது என்பது இயலாததொன்றாகும்.

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் பிற் காலத்தில் மனிதகுலம் முழுமைக்குமே மாநபியாக, மாபெரும் வழி காட்டியாக-குருவாக-விளங்கப் போவதால் அம் மாபெரும் இறைஞானப் பெருஞ்சுடருக்கு அறிவுறுத்திக் கல்வி கற்பிக்கும் அருகதை வேறு எந்த மனிதருக்கும்

5