80
நம்பிக்கைக்கேற்ப அவரவர் சமய நெறிப்படி வாழ, சடங்கு சம்பிரதாயங்களைப் பேணி ஒழுகப் பணிக்கிறது.
“உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் சமயம்”
என்ற திருமறை வாசகம் தெளிவாக உணர்த்துவதை முன்பே கண்டோம்.
இதை உலக மக்களுக்கு முழுமையாக உணர்த்தும் வகையில் பெருமானார் (சல்) அவர்கள் தன் வாழ்க்கையில் எடுத்துக்காட்டாகக் கடைப்பிடித்தொழுகிய நிகழ்ச்சி யொன்றைக் காணலாம்.
மதீனாவில் வாழ்ந்து வந்த பெருமானார் அவர்களின் வாழ்வும் வாக்கும் மக்களின் மனதிலே மாபெரும் மாற்றங்களை விரைந்து ஏற்படுத்தி வந்தன. மக்கள் தாங்களாகவே இறை நெறியாகிய இஸ்லாத்தின் மேன்மையை உணர்ந்து, முஸ்லிம்களாகி வந்தனர். முஸ்லிம்கள் மட்டுமல்லாது மற்ற சமயத்தவர்களும் தங்களுக்கு ஏற்பட்டு வந்த ஐயப்பாடு களையெல்லாம் பெருமானாரிடமே கேட்டுத் தெளிவு பெற்று வந்தனர்.
பள்ளி வளாகத்தில் கிருஸ்தவப் பிரார்த்தனை
மதினாவில் நபிகள் நாயகத்தை நேரில் கண்டு பல்வேறு விஷயங்களைப் பேசி விவாதிக்கப் பல்வேறு சமயத் தூதுக் குழுக்கள் வந்தன. அவற்றுள் குறிப்பிடத்தக்க கிருஸ்தவப் பாதிரியார்கள் குழு நஜ்ரான் எனுமிடத்திலிருந்து வந்திருந்த 70 பேரங்கிய குழுவாகும். இதற்கு முன் வந்த சிறு சிறு குழுக்கள் மதீனாவில் ஆங்காங்குள்ள தனிப்பட்டவர்களின் இல்லங்களிலே தங்கி நாயகத் திருமேனியைக் கண்டு உரையாடி, ஐயந்தெளிந்து செல்வது வழக்கம். ஆனால், பெரும் எண்ணிக்கையில் நஜ்ரானிலிருந்து வந்த இந்தக்