பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

கொண்டனர். இதனினும் வசதிமிக்கதான அருகிலுள்ள மற்றொரு மாதாகோயிலான கான்ஸ்டன்டைன் தேவாலயத்தில் தொழுகைப் பாய் விரிக்கப்பட்டிருக்கிறது. விரும்பினால் அங்கு வசதியாகத் தொழுகை நடத்தலாம் எனவும் கூறி வேண்டினர்.

ஆனால், கலீஃபா உமர் (ரலி) அவர்கள் மாதாகோவில்களின் உட்புறத்தே தொழுகை நடத்தாமல் அருகே இருந்த திறந்த வெளியில் தொழுகை நடத்தினார். தொழுது முடித்தபின், தான் ஏன் தேவாலயங்களுள் தொழவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கினார்.

‘நான் உங்கள் அன்பு வேண்டுகோளுக்கிணங்க தேவாலயத்தினுள் தொழுதிருக்கலாம். அவ்வாறு நான் தொழுகை நடத்தியிருந்தால் இன்றில்லாவிட்டாலும் நாளை ஒரு காலத்தில் நான் தொழுத இடம் என்ற காரணம் காட்டி, முஸ்லிம்கள் உரிமை பாராட்டி, அவ்விடத்தில் மசூதி நிர்மாணிக்க முயலலாம். திருக்குர் ஆன் திருமறையின் 22வது அத்தியாயத்தின் 40வது வசனம் “மடாலயங்களையும் மாதா கோயில்களையும் யூதர்களுடைய ஜெபாலயங்களையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு முஸ்லிம்களுக்கு உள்ளது” எனக் கூறி,

“அல்லாஹ் மக்களில் சிலரைக் கொண்டு சிலரைத் தடுத்துக் கொண்டிராவிடில் மடங்கள், கிருஸ்தவ ஆலயங்கள், யூத, ஜெபாலயங்கள், அல்லாஹ்வின் பெயர் அதிக அளவில் கூறப்படும் மஸ்ஜித்கள் ஆகியவை தகர்க்கப்பட்டிருக்கும். திண்ணமாகத் தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ் உதவி செய்வான்.”

(திருக்குர்ஆன் 22:40)