பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

முடியும். இவை எதையுமே அவர் செய்யவில்லை. அவர், மக்கா வாசிகளை ஏறிட்டுப் பார்த்தபோது, வெட்க உணர்வால் குறுகி நிற்கும் அவர்களிடம்,

“எந்தக் குற்றப் பொறுப்பும் உங்கள் மீது சுமத்தாது, உங்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை, வழங்கப்படுகிறது; நீங்கள் செல்லலாம்.”

எனக் கூறி அத்தனை முஸ்லிமல்லாத வேற்றுச் சமய குறைஷிகளை விடுதலை செய்து அனுப்பினார் அண்ணலார்.

இந்தச் சூழலை மனதிற் கொண்டு ஒரு நிமிடம் நாம் சிந்தித்துப் பார்த்தால் பல உண்மைகள் நமக்குத் தெளிவாகப் புலப்படும்.

சற்று நேரத்துக்கு முன்புவரை முஸ்லிமான பிலால் (ரலி) அவர்களின் தொழுகை அழைப்பொலியைக் கூடக் கேட்கப் பொறுக்காமல்-அந்த அழைப்பும்கூட மக்கத்தவர்களைப் பற்றி இல்லாமல் இறைவனைப் புகழும் வாசகங்களை மட்டும் கொண்ட அழைப்பொலியைக் கேட்கப் பிடிக்காத முஸ்லிமல்லாத அத்தாப் இப்னு ஆசீத் எனும் பெரும் தலைவர் ஒரு முஸ்லிமை ‘கருங்குரங்கு’ எனப் பழித்த நிலைமாறி, அண்ணார் கடுகளவுகூடத் தீங்கிழைக்காது, அனைவருக்கும் அளித்த விடுதலை, அத்தலைவரின், அடிமனத்தைத் தொட்டது. ஒரு முஸ்லிமின் உன்னதத்தை அண்ணலார் வழி உணர்ந்த அவர், துள்ளிக் குதித்தவராகப் பெருமானார் முன்வந்து, தன்னையே பெருமானாரிடம் ஒப்படைத்துக் கொண்டவராக, “முஹம்மத்! நான்தான் அத்தாப் இப்னு ஆசீத். இஸ்லாத்தின் மாபெரும் எதிரியாக இருந்தவன். வணங்குதற்குரியவன் இறைவனைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத் இறைவனின் திருத்தூதர் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்!” எனக் கூறி