பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

101

வடிவிலேயே இன்றும் அமைந்துள்ளது” எனக் கூறி விளக்கி, அங்கு அழைத்துச் சென்றார். நானும் சென்று பார்த்து 'ஜியாரத்' செய்து வந்தேன்.

இவ்வாறு உலகெங்கும் தோன்றி இறை நெறி புகட்டிச் சென்ற சிறிய, பெரிய நபிமார்கள் அனைவரையும் அவர்கட்கு இறைவன் வழங்கிய வேதங்களையும் ஒவ்வொரு முஸ்லிமும் ஒப்புக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறார். அதே சமயம் இறுதி இறைத் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்களையும் அவர்கட்கு வழங்கப்பட்ட இறுதி வேதமாகிய திருக்குர்ஆன் திருமறையையும் முழுமைாக ஏற்றுப் பின்பற்றக் கூடியவர்களாக இருக்கிறோம்.

இங்கு 'ஒப்புக் கொள்கிறோம்' என்ற சொல்லுக்கும் 'ஏற்றுக் கொள்கிறோம்' என்ற சொல்லுக்குமுள்ள வேறுபாட்டை நன்கு உணர வேண்டும். 'ஒப்புக் கொள்வது' என்பது வேறு, 'ஏற்றுக் கொள்வது' என்பது வேறு. ஒப்புக் கொள்வதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அவசியமோ கட்டாயமோ இல்லை. ஆனால், ஒன்றை முழு மனதோடு ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்றால், அதை முழுமையாகக் கடைப்பிடித்தொழுக வேண்டுமென்ற கட்டாயம் தானாகவே உருவாகி விடுகிறது. இப்படி உள்ளூர் நபி முதல் உலகளாவிய இறுதி நபிவரை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்கள் இறைவனால் உலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பது இஸ்லாமிய மரபு வழிச் செய்தியாகும். இவர்களில் இருபத்தைந்து நபிமார்களைப் பற்றிய செய்திகளை மட்டுமே இறை மறையாகிய திருக்குர்ஆன் தருகிறது.

இந்தக் கருத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் இறை தூதர்களில் 3 பேர் இந்தியாவில் தோன்றியிருக்கிறார்கள். அவர்கட்கு ஆறு வேதங்கள் இறைவனால் வழங்கப்பட்டுள்ளன என முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு