பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

தண்டனையை இப்போது நரகத்தில் அனுபவித்துக் கொண்டுள்ளான்', என்று கூறினார்.

"பேசு நரகிற் சிலர் பெருந்தலையைத் தீ
ஆசமியில் வைத்து அரைக்குமது கண்டே
மாசினையடுத்த இம் மனிதத்தவரென்ன
தேசமில் கைக்கூலி பற்றித் தின்றவர்களென்றார்.”

இங்குக் 'கைக்கூலி' என்ற சொல்லிற்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று லஞ்சத்தைக் குறிப்பது. மற்றொரு பொருள் பெண்ணை மணம் முடிக்கும்போது அவனுக்கு இஸ்லாமிய முறைப்படி 'மஹர்' எனும் வாழ்க்கைப் பணத்தை அன்பளிப்பாக பெண்ணுக்கு வழங்கி மணம் முடிப்பதற்கு மாறுபாடாக பெண்வீட்டாரிடமிருந்து பெறும் வரதட்சிணையும், கைக்கூலி என்றே அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய நெறிக்கு முற்றிலும் மாறுபாடான இப்பாவச் செயலை - கைக்கூலியைப் பெறுகின்றவனுக்கு நரகில் இத்தகைய கொடுந்தண்டனைகளே காத்திருக்கின்றது என்பதை இச் சம்பவம் சுவைபடச் சுட்டிக்காட்டுகிறது.

அத்துடன், கைக்கூலி பெறுகின்றவனைப் பற்றிப் பேசும்போது, அநியாயமாகக் கைக்கூலி வாங்கி வாழ்பவனை 'கைக்கூலி பற்றி தின்றவன்' என மிகுராஜ் மாலை ஆசிரியர் ஆலிப் புலவர் குறிப்பிடுகிறார்.

சாதாரணமாக உண்டான், சாப்பிட்டான், பருகினான், அருந்தினான் என்றுதான் கண்ணியமாகக் குறிப்பிடுவது வழக்கம். ஆடு தின்றது, மாடு தின்றது என்று கூறுவது மரபு. ஆனால், கைக்கூலி வாங்கி உண்பவனை ‘கைக்கூலி பற்றித் தின்றவர்கள்' என்று இழிவாகக் கூறுவதன் மூலம் கைக்கூலியின் இழிநிலையைப் புரிய வைக்கிறார். அத்துடன் அமையாது, 'கைக்கூலி பெற்றான்' எனக் குறிப்பிடாது கைக்கூலி பற்றித் தின்றவர்’ எனக்