பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

135

"அன்று மதீனாவில் அண்ணலாரைக் காண வந்த பாதிரிமார்களை, பிரார்த்தனை நேரம் நெருங்கியபோது அவர்களைப் பள்ளி வளாகத்திலேயே கிருஸ்தவ சமயச் சடங்கு முறைகளோடு பிரார்த்தனை செய்து கொள்ளப் பணித்தார். பெருமானார் அவர்கள். இரண்டு இறைவனில்லை, எங்கும் ஒரே இறைவன்தான் இருக்கிறான். அவனை இம் மசூதி வளாகத்திலிருந்தும் நீங்கள் வணங்கலாம்” எனக் கூறி ஊக்குவித்த பெருமானார் வழிவந்த உமர் அவர்கள் இங்கு தொழத் தயங்குவது ஏனோ? என வினாவெழுப்பினர். உடனே பாதிரியாருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டது. ஒரு வேளை கலீஃபா உமர் அவர்கள் இதைவிடச் சிறந்த இடத்தைத் தேடுகிறாரோ என எண்ணிய மாத்திரத்தில் அருகில் இதை விட சிறந்ததொரு தேவாலயம் இருக்கிறது. அங்கு எல்லா வசதிகளும் இருக்கிறது என்று கூறினார். இதைக் கேட்டபடி உமர் (ரலி) அவர்கள் நன்றி கூறியபடி தேவாலயத்திற்கு முன்பிருந்த மைதானத்திற்குச் சென்று, தன் தொழுகையை முடித்துக் கொண்டு, மீண்டும் சர்ச்சுக்கே வந்தவுடன், தான் பாதிரிகளின் கோரிக்கையை ஏற்று ஏன் தேவாலயத்துள் தொழவில்லை என்பதற்கான காரணத்தை விளக்கினார்.

"நான் இங்கு தொழுவது மிகவும் சுலபம். உங்களோடு எனக்குள்ள நட்புணர்வைக் காட்டுவதற்கு நான் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், நாளை வருகின்றவர்கள், உமர் அவர்கள் இந்த இடத்திலே தொழுதார்கள். இந்த இடத்தில் அவர்கள் நினைவாக நாங்கள் ஒரு பள்ளி வாசல் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தால் உங்களுடைய நிலைமை என்னாவது? இக்கட்டான அந்நிலையை ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள மாட்டான். உங்கள் இடம் உங்களுடையதாகவே இருக்க வேண்டும். அதில் எந்த வித இடையூறும் வந்துவிடக் கூடாது. அதற்காகத்தான் நீங்கள் இவ்வளவு