பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

139

திற்கும் கட்டியம் கூறும் சட்ட முறைகளாக அமைந்துள்ளன என்பது எண்ணி இன்புறத்தக்கதாகும். உலக மக்களுக்கு என்றென்றும் நல்வழி காட்ட வல்ல அழகிய முன் மாதிரியாக நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வகுத்தளித்துள்ளதை இந்தச் சட்டத்தில் காண முடிகிறது.

ஆதாம் வழி வந்தோரே அனைவரும்

இஸ்லாத்தின் அடிப்படை உணர்வு மனித குலத்தை முழுமையாக சகோதர வாஞ்சையுடன் அணுகுவதாகும். இஸ்லாத்தைப் பொறுத்தவரை முதலில் நீ மனிதன். அதன் பிறகுதான் நீ எந்த மதம், மார்க்கம் என்பதெல்லாம் மனித குலத்துக்கு மதிப்பளிப்பது இஸ்லாம். எந்த நாட்டில் வேண்டுமானாலும் இரு; எந்த மொழியை வேண்டுமானாலும் பேசு; எந்த இனத்தைச் சேர்ந்தவனாகவும் இரு; எல்லோரும் ஆதாம் (அலை) வழி வந்த சகோதரர்கள் என்பதை மட்டும் மறந்து விடாதே. இதனை எண்பிக்கும் நிகழ்வு ஒன்று பெருமானார் (சல்) அவர்கள் வாழ்வில் நடைபெற்றது.

நாயகத் திருமேனி அவர்கள் தம் தோழர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே இறந்துபோன யூதர் ஒருவரின் சடலத்தை சுமந்தபடி சிலர் வந்து கொண்டிருந்தனர். இக் காட்சியைக் கண்டவுடன் பெருமானார் (சல்) அவர்கள் எழுந்து அமைதியாக நின்றதோடு தன் தோழர்களையும் எழுந்து நிற்கச் சொன்னார். அவர்களும் நின்றனர். அச் சடலம் அவர்கள் பார்வையிலிருந்து மறையும்வரை நின்று விட்டு, பின் அமர்ந்தனர்.

பெருமானார் செயல் அவர்தம் தோழர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. காரணம், இறந்து போன யூதர் அண்ணலாருக்கு அளவிலா தொல்லையும் துயரமும் கொடுத்து வந்த துஷ்டர். வாழ்நாளெல்லாம் கெடு மதியோடு வாழ்ந்த ஒரு தீயவருக்கு எழுந்து நின்று இறுதி