பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

இவ்வுணர்வுகளை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தெளிவாக செயல்வழி வெளிப்படுத்தியும் வருகிறார்கள்.

சில ஆண்டுகட்கு முன்பு அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் சென்னை செளகார்ப்பேட்டை மீலாது விழாக் குழுவினர் முச்சந்தில் மேடையமைத்து மீலாது விழா கொண்டாடினர்.

அவ்விழாவில் பங்கேற்கும்படி இஸ்லாமியப் பெரியோர்கள் சிலரை அணுகினார்கள். அவர்களில் உயர் நீதிபதியாயிருந்த முஸ்லிம் பெரியவரும் அடக்கம். ஆனால் பொதுக் கூட்டமாக முச்சந்தியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மறுத்து விட்டார். விழாக் குழுவினர் என்னிடம் இதைக் கூறி வருந்தியதோடு தங்கள் நன் நோக்கம் நிறைவேற உதவுமாறு வேண்டினர்.

அவர்களின் உன்னத நோக்கம் எனக்குப் பிடித்திருந்தது மட்டுமல்ல, அவர்கட்கு உதவ வேண்டும் என்ற வேட்கையும் எனக்கு ஏற்பட்டது. காரணம், இம்முறையில் தான் மீலாது விழாக்கள் நடைபெற வேண்டும் என்பது இளமைக்காலக் கொள்கையாகவும் இருந்தது. அப்போது உயர்நீதி மன்ற நீதிபதியாயிருந்த ஜஸ்டிஸ் மோகன் அவர்களை அணுகினேன். நீதிபதி மோகன் அவர்கள் என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். எனக்குத் துணையாயிருப்பதில் பெருமகிழ்வடைபவர். எங்கள் கோரிக்கையை உடன் ஏற்றதோடு விழாவில் மிக அருமையாகப் பெருமானார் வாழ்வையும் வாக்கையும் பற்றி பேசினார்.

எம்பெருமானார் அல்ல-நம் பெருமானார்

அவருக்கு முன்னதாக அங்கே பேசிய மெளலவி ஒருவர் பெருமானாரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் 'எம் பெருமானார் எம்பெருமானார்! எம் பெருமானார்!’ என்றே குறிப்பிட்டுப் பேசினார். இதைக் கடுமையாகக் கண்டித்த நீதிபதி “பெருமானார் உங்களுக்குமட்டும் சொந்தமானவர்