பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

பெயரளவில் தமிழர்களாக வாழ நேர்ந்துள்ளதை இந்நேரத்தில் நினைக்காமல் இருக்க இயலவில்லை. தமிழர் கலையும் தமிழ்ப் பண்பாடும் அவர்களைப் பொருத்தவரை பழங்கதையாகப் போய்விட்டது. வந்த நாட்டில் தங்கள் சொந்த மொழி, கலை, பண்பாடுகளைப் பேணவும், பேணி வளர்க்கவுமான தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது பெருமகிழ்வளிக்கிறது.

பொதுவில் 'பண்பாடு’ என்பது மனித வாழ்வின் அடித்தளமான ஒன்று. எதுவுமே இல்லையென்றால் கூட பண்பட்ட மனதை ஒருவன் வளர்த்துக் கொண்டிருந்தால் போதும் வாழ்க்கையில் அவன் எப்படியும் முன்னேறி விடுவான். இனிய பண்பாளனை எவரும் விரும்புவர். இது மனித இயல்பு.

பண்பாடு என்றால் என்ன?

பண்படுத்துவது பண்பாடு. இதை ஆங்கிலத்தில் 'கல்ச்சர்' (Culture) என்று கூறுகிறோம். நிலத்தைப் பண்படுத்தி வேளாண்மை செய்வதை 'Agriculture' என்று சொல்கிறோம். முறையாக நிலத்தைப் பண்படுத்திவிட்டால் அதில் எதை வேண்டுமானாலும் விளைவிக்கலாம். பண்படுத்தப்படாத நிலத்தில் எதையுமே விளைவிக்க முடியாது. அதே போலத்தான் பண்பாடு என்பது உள்ளத்தைப் பண்படுத்துவது. சரியானபடி நம் உள்ளத்தைப் பண்படுத்திவிட்டால், அங்கே உருவாகும் உணர்வுகளின் அடிப்படையில் சிந்தனைகளின் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டுவிட்டால், உறுதியாக நாம் வாழ்க்கையில் எதையெல்லாம் சாதிக்க விழைகிறோமோ அதையெல்லாம் எளிதாகச் சாதிக்கவியலும். நம் வாழ்க்கை சரியான நேர்கோட்டில் வெற்றி நடைபோட அது அடிப்படையாகவும் அமைந்து விடும். சுருங்கச் சொன்னால் எவனொருவன் பண்பட்ட மனதை உடையவனாக