பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/170

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168


அடித்தளம் பண்பாடு

யார்? என்று பாராமல் என்ன? என்பதில் மட்டும் கருத்தைச் செலுத்துவது தமிழ்ப் பண்பாடு. இது முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதம் (அலை) காலந்தொட்டு வருகின்ற இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பாடுமாகும்.

இஸ்லாத்தினுடைய அடித்தளப் பண்பு மனிதத்துவத்துக்கு மதிப்புக் கொடுப்பதாகும். முதலில் மனிதன் மற்றதெல்லாம் பின்புதான். முதல் நபி ஆதாம் (அலை) தொடங்கி அண்ணல் நபி (சல்) ஈராக உள்ள அனைத்து நபிமார்களும் எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் எல்லா மொழியிலும் தோன்றியிருக்கிறார்கள் என்றால் எல்லா நாட்டிலும், எல்லா இனத்திலும், எல்லா மொழியிலும் இருப்பவர்களெல்லாம் உன்னைச் சார்ந்தவர்களே என்பதுதானே பொருள்.

'ஹஜ்' உணர்த்தும் அரும்பண்பாடு

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் கடமை இதைத்தானே இன்று உலகுக்கு வெளிச்சப்படுத்திக் கொண்டுள்ளளது. நாடாளும் மன்னனாக இருந்தாலும் நாடோடியாக இருந்தாலும் கோடீஸ்வரனாக இருந்தாலும் ஏதுமற்ற ஒட்டாண்டியாக இருந்தாலும் ஹஜ்ஜின்போது ஏஹ்ராம் உடையான தைக்கப்படாத ஒரு துண்டை உடுத்தியும் மற்றொரு துண்டைப் போர்த்தியும் ஹஜ் கடமையாற்ற கஃபத்துல்லாவில் குழுமுகிறார்கள். பல்வேறு நாட்டவர், மொழியினர், நிறத்தவர், பண்பாட்டினர், நடையுடை பாவனையினர். அங்கு குழுமியுள்ள ஹாஜிகள், வேறுபாடுகள் அத்தனையையும் புறந்தள்ளி நாம் அனைவரும் மனிதர்கள். ஆதம் (அலை) வழிவந்த சகோதரர்கள் என்பதை மட்டும் நினைவிற் கொள்கின்றனர். மற்றவைகளெல்லாம் இருக்கும் இடந்தெரியாமல் மறைந்து போய் விடுகின்றன. இம்