பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

171


உய்திக்கு ஒரே வழி

டல்லாசிலிருந்து ஹல்ஸ்டனை நோக்கிச் சென்று கொண்டிருந்த 'கிரே ஹவுண்டு' பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் அருகில் அமர்ந்திருந்தவர் என்னோடு ஏதேதோ பேசிக் கொண்டு வந்தார். ஒரு பஸ் நிறுத்தத்தில் இறங்கிப் போய்விட்டார். தனியாக அமர்ந் திருந்த நான் 'யா அல்லாஹ்' என்று கூறியபடி நெட்டியுயிர்த்தேன். இச் சொல்லைக் கேட்டமாத்திரத்தில் அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த பெரியவர் என்னை நோக்கி 'சலாம் அலைக்கும்’ என்று கூறி புன்முறுவல் பூத்தபடி என்னருகில் வந்து அமர்ந்தார். இச்செயல் எனக்கு வியப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது.

பஸ்ஸில் ஏறியதிலிருந்தே அந்தப் பெரியவரைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அவரது தாடியும் கையில் உருண்டு கொண்டிருந்த தஸ்பீகை ஜெபமாலையாக நான் கருதியதால் அவரை ஒரு கிறிஸ்துவப் பெரியவராக நினைக்கத் தூண்டியது. 'சலாம்' கூறியதைக் கேட்டபின் அவர் ஒரு முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டு நானும் அவருக்குப் பதில் சலாம் கூறி, அவர் அமர இடம் ஒதுக்கித் தந்து சற்று தள்ளி அமர்ந்தேன்.

'நீங்கள் முஸ்லிமாக....' நான் முடிக்கும் முன்பே அவர் ஆர்வத்தோடு பேசத் தொடங்கினார். கிருஸ்தவனாக இருந்த நான் இஸ்லாத்தில் இணைந்து ஐந்தாறு ஆண்டுகளாகிவிட்டன. ராணுவத்தில் பணியாற்றும் என் அண்ணன் மகனைத் தவிர எங்கள் குடும்பம் முழுக்க இஸ்லாத்தில் இணைந்துவிட்டோம் என்று கூறும்போது அவர் முகம் பூரிப்பால் நிறைந்திருந்தது. "உங்கள் குடும்பத்தவர்கள் யாராவது அரபுநாடுகளில் வேலை செய்கிறார்களா? நீங்கள் இஸ்லாத்தின் இணையக் காரணம் எதுவாக இருந்தது?" என்று கேட்டவுடன் அம் முதியவர் வாஞ்சையாக என்