பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தற்கும் நான் முஸ்லிமானபின் என்னை நடத்துவதற்கும் மாபெரும் இடைவெளியைக் காண்கிறேன். இன்று மதிப்பாகவும் மரியாதையாகவும் நடத்துகிறார்கள். 'கறுப்பர் என்ற மன நிலைக்கு மாறாக ஒரு முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தோடு சரிநிகர் சமானமாக, பவ்வியமாகப் பழகுகிறார்கள் என்று உணர்ச்சி வசப்பட்டவராகக் கூறி முடித்தார்.

இந்த நிகழ்ச்சிகளை எதற்காகக் கூறுகின்றேன் என்றால் இஸ்லாம் மனித நேயத்தை மையமாகக் கொண்டே மனித குலத்தை அணுகுகிறது. அரவணைக்கிறது.

மனவளர்ச்சி அளவுகோலே மனித நேயம்

ஒருவர் மன வளர்ச்சி பெற்றிருக்கிறார் என்றால் அதன் கன பரிமாணத்தை அறிந்து கொள்ளும் அளவுகோலே அவர் வெளிப்படுத்தும் மனித நேய உணர்வுதான். யாராவது ஒருவர் மற்றொருவரை விரும்பினால், நேசித்தால், அவருடைய நடத்தையில் அன்பும் அக்கறையும் கட்டத் தொடங்கிவிட்டால் அவர் மனவளர்ச்சி பெற்றுவிட்டார் என்பதற்கு அதை ஒரு அடையாளமாகக் கொள்ளலாம். பிறர் மாட்டு மனித நேயத்தை எப்படிப் பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்கு பெருமானார் பெருவாழ்வில் எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம் என்றாலும் ஒரு சம்பவத்தை இங்குக் கூறுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.


முரடனை மனிதப் புனிதனாக மாற்றிய மாநபி

நபிகள் நாயகம் (சல்) அவர்களை நேரில் கண்டு, மார்க்கம் பற்றி விவாதிக்க ஒரு குழுவினர் அண்ணலார் இருப்பிடம் வந்தனர். அக்குழுவில் முரட்டு சுபாவமுள்ள மூர்க்கன் ஒருவனும் இருந்தான். அக்குழுவினர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததால் நன்றாக இருட்டி விட்டது. அதற்குமேல் அக்குழுவினர் தங்கள் ஊர் போய் சேருவது