பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/181

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

179

தரமுடியும் என்றால் நாம் ஏன் அதை அவர்கட்கு வழங்கக் கூடாது?” எனக் கூறி மனித நேயத்தின் மாண்பைச் சுட்டிக் காட்டி, பின்பற்றத் தூண்டினார்கள்.

பிறருக்குத் துணையாக, ஆதரவாக இருப்பது மட்டுமே மனித நேயமாகிவிடாது. முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் எந்நிலையிலும் யாருடைய மனமும் புண்படாமல் நடந்து கொள்வதும் மனித நேயத்தின்பாற்பட்டதுதான் என்பது நபி வழியாகும்.

ஒரு சமயம் அலி (ரலி) அவர்கள் சாலைவழியே சென்று கொண்டிருந்தார். அவருக்குச் சற்று முன்னதாக ஒரு யூதர் சென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த அலி (ரலி) அவர்கள் மனதில் ஒரு விபரீத எண்ணம் எழுந்தது. ஒரு யூதனுக்குப் பின்னால், அவனைப் பின் தொடர்வதுபோல் ஒரு முஸ்லிம் நடப்பதா? கூடாது. ஒரு முஸ்லிமைப் பின் தொடரும் முறையிலேதான் ஒரு யூதன் நடக்க வேண்டும் எனக் கருதியவராகத் தன் நடையின் வேகத்தைக் கூட்டினார். மிக வேகமாக வேர்க்க விறுவிறுக்க நடந்து, அந்த யூதனைக் கடந்தவராக மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குபவராக பெருமானார் முன்னிலையில் சென்று நின்றார். அலி (ரலி) வந்து நின்ற கோலத்தைக் கண்ட அண்ணலார் என்ன அலியார் அவர்களே! ஏதேனும் அவசர காரியமா? மிகமுக்கிய அவசரக் செய்தி ஏதேனும் கொண்டு வந்திருக்கிறீர்களா? என வினவியபோது, அலியார் அவர்கள் யூதனை முந்தி வந்தக் காரணத்தைக் கூறியபோது, அண்ணலாரின் முகம் வாட்டமடைந்து விட்டது. "மாபெரும் தவறு செய்து விட்டீர்கள் அலியார் அவர்களே! நீங்கள் முந்தி நடக்க முனைந்த காரணத்தை அந்த யூதர் அறிய நேர்ந்திருந்தால் அவர் மனம் எவ்வளவு புண்பட்டிருக்கும். ஒரு முஸ்லிம் யாருடைய மனமும் எந்தக் காரணத்திற்காக வும் வருந்தும்படி நடந்து கொள்ளவே கூடாது. ஆயினும், தெரிந்தோ தெரியாமலோ அந்த யூதன் மனம் வருந்தும்படி