பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/185

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183

செய்கின்றன. ஆனால் இஸ்லாம் மட்டுமே ஜகாத், சதக்கா, ஃபித்ரா எனப் பிரித்து தானமளிக்கச் சொல்கின்றது. ஆனால், எந்தச் சமயமும் தானமளிப்பதைக் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தம் சொத்தில் நிகர வருமானம் உடையவர், அவ் வருமானத்தில் இரண்டரை சதவிகிதம் குறிப்பிட்ட ஏழை, எளியவர்கட்கு வழங்கக் கட்டாயமாக்கிக் கட்டளை யிடுகிறது. அதேபோல் ஹஜ் எனும் புனிதப் பயணத்தை அனைத்துச் சமயங்களும் வற்புறுத்திய போதிலும் இஸ்லாம் மட்டுமே உடல் வலுவும் பொருள் வசதியும் உள் ளவர்கள் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் மக்கள் நகரிலுள்ள கஃபா எனும் இறையில்லம் சென்று மீள வேண்டும் எனப் பணிக்கிறது.

சுருங்கச் சொன்னால் இவ்வைந்து கடமைகளையும் மற்ற சமயங்கள் ஒருவர் எப்படி வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் எனக் கூறுகின்றன. ஆனால், இஸ்லாமிய மார்க்கம் இவ்வைம் பெரும் கடமைகளையும் இப்படித் தான் நிறைவேற்ற வேண்டும் என வரையறையோடு கூடிய செயல்பாடுகளை கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்கக் கட்டளையிடுகிறது.

இஸ்லாமிய கடமைகள் ஏற்படுத்தும் நம்பிக்கை

இக்கடமைகளை முறையாகக் கடைப்பிடித்து வாழும் ஒரு முஸ்லிம் மீது மற்றவர்களுக்கு ஏற்படும் மதிப்பும் மரியாதையும் தனி. இபாதத்துடன் வாழும் முஸ்லிம் மீது மற்றவர்கள் கொள்ளும் நம்பிக்கை அலாதியானது. அத்தகையவர்களை மனிதப் புனிதனாகவே கருதிப் போற்றுவது தவிர்க்கவியலா ஒன்றாகிறது.

தனி மனிதனும் சமுதாய மனிதனும்

உயர் பண்பு நலனைப் பேணி வாழ, வெற்றி பெற வாழ்வியல் போக்கை நன்கு உணர்ந்து தெளிய வேண்டும்.