பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/187

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185

இடம். ஒவ்வொரு சமுதாய மனிதனும் தனிப்பட்ட தம் விருப்பு வெறுப்புகளையெல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு, எல்லோருக்கும் பொதுவான பொதுக் பண்புகளைப் பேணி நடப்பவனாகத் தன்னை எல்லா வகையிலும் கட்டுப்படுத்திக் கொண்டு நடமாடுகிறான். இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைச் சொல்லுவார்கள். சமுதாய வீதியில் கம்பைச் சுழற்றிச் செல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு என்றாலும் யாருடைய கண்ணிலும் படாதபடி சுழற்றிச் செல்ல மட்டுமே உரிமை உண்டு.

எனவே, சமுதாய வீதிக்கென்று உள்ள பொதுப் பண்பைக் கையாண்டு வாழ வேண்டும். ஏரிக்கு ஏரி கரை வேண்டும். வயலுக்கு வயல் வரப்புத் தேவை. அப்போது தான் அவையவை தத்தமது கட்டுக்குள் சிறப்பாகச் செயல்பட முடியும். இந்த உண்மையைத்தான் இஸ்லாம் வற்புறுத்துகிறது.

பெருமானார் (சல்) அவர்களின் பெருவாழ்வும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டுள்ளது.

வரையறையோடு கூடிய வாழ்வியல் முறையே இஸ்லாம்

மனிதன் எல்லாவகையிலும் வரையறைக்குட்பட்டு வாழ முனைய வேண்டும் என்ற உன்னத வாழ்வியல் முறையைத்தான் இஸ்லாம் உலகுக்கு உணர்த்திக் கொண்டுள்ளது. ‘எப்படியும் வாழலாம்' என்பது இஸ்லாமிய முறையன்று. 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்பதுதான் அண்ணலார் உணர்த்தும் இறை நெறி வாழ்க்கை முறை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொண்டால் இன்றையச் சமுதாயச் சீர்கேடுகள் பலவும் தலைதூக்க வழியில்லாது போய் விடும். எல்லாவற்றுக்கும் மேலாக நாடு, இன, மொழி, நிற வேறுபாடுகட்கு அப்பாற்பட்ட நிலையில், எல்லோரும் ஆதாம் பெற்ற