பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

வந்திருந்தன. அவற்றில் ஒன்று பெருமாள் தேவர் எனும் வாசகரால் எழுதப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் அந்த வாசகர் தன் மன உணர்வுகளைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்.

"பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம் எனும் கட்டுரையைப் படிப்பதற்கு முன்பு இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகத்தைப் பற்றியும் மிகத் தவறாகக் கருதிக் கொண்டிருந்தேன். இந்த நாட்டிலே இருக்கக் கூடிய சமயங்களையெல்லாம் - மதங்களையெல்லாம் அழிக்க வந்த மார்க்கம் இஸ்லாம் என்று கருதிக் கொண்டிருந்தேன். அதனால் இஸ்லாத்தை எதிர்ப்பதையே குறிக்கோளாகவும் கொண்டிருந்தேன். இதற்காக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலே என்னை இணைத்துக் கொண்டேன். ஏனென்றால், இஸ்லாமிய சமயத்தைப் பற்றி எனக்கு அப்படிப்பட்ட கருத்துகள்தான் ஊட்டப்பட்டிருந்தன. 'பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்' என்ற இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர்தான், எல்லா சமய அடிப்படைகளும் ஒன்றே என்பதும் அவை இறைவனால் இறை தூதர்களுக்கு அருளப்பட்டவை என்பதும், எல்லா மதங்களும் ஒருங்கிணைந்து வாழக்கூடிய சரியான ராஜபாட்டையைக் காட்டிக் கொண்டிருப்பது இஸ்லாமிய நெறி மட்டுமே என்பதையும் நான் உணர்ந்து தெளிந்தேன். ஆகவே, இஸ்லாத்தின் மீது எனக்கு இருந்த வெறுப்பு என்னைவிட்டு அகன்றது மட்டுமல்ல; அதன்மீது எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டு விட்டது. நான் இஸ்லாத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இப்படிப்பட்ட பயனுள்ள கட்டுரையை வெளியிட்ட உங்களைப் பாராட்டுகிறேன்" என்று எழுதியிருந்தார். அந்தக் கடிதச்சாரத்தை அவர் தினமணி வாசகர் பகுதியில் வெளியிட்டார்.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், சரியான தகவல்களை சரியான முறையிலே, சரியான