பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/249

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

247


சூஃபிகளும் இறைநேசச் செல்வர்களான வலிமார்களுமே என்பது எல்லா வகையிலும் தெளிவாக்குகிறது.

ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி

எனினும், ஆங்கிலேய வரலாற்றாசிரியர்கள் குறிப்பாக ஸ்மித் போன்றவர்கள் இந்தியர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில், இந்தியாவில் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என எழுதி வைத்துள்ளார்கள். இது ஒரு வரலாற்று மோசடியாகும். ஆனால், பின்னால் வந்த பி.என். பாண்டே போன்ற நேர்மையான இந்திய வரலாற்றாசிரியர்கள் இஸ்லாம் இந்தியாவில் எக்காலத்திலும் எக்காரணம் கொண்டும் வாளாலோ அல்லது ஆட்சி அதிகாரத்தாலோ இஸ்லாம் பரப்பப் படவில்லை என்பதைப் பல ஆதாரங்களைக் கொண்டு நிறுவி, தவறான எண்ணங்களைத் துடைத்தெறிந்துள்ளார்கள்.

தவறான பொருளில் ஜிகாது

இஸ்லாத்தை இழிவுபடுத்த, முஸ்லிம்கள் மீது குற்றம் சுமத்த சில நல்ல சொற்களைத் தவறான பொருளில் கையாண்டு இஸ்லாத்தின் மீது மாசு கற்பிக்க முயல்கிறார்கள். அதற்கு அவர்கள் கையாளும் சொல் 'ஜிஹாது’ எனும் சொல்லாகும். இப்போக்கு சிலுவைப் போர் காலம் முதலே இருந்து வரும் சொல் மோசடியாகும். பொருளாழம் மிக்க ஜிஹாது எனும் சொல்லைத் தவறான பொருளில் பயன்படுத்துவதை அறியும்போது மிகவும் வேதனையாக உள்ளது.

யாராவது ஒரு முஸ்லிம் ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஜிஹாது எனும் சொல்லைப் பயன்படுத்தினால் கலவரத் தீவிரவாதியாக அவனைக் காணும் சூழ்நிலையே இன்று எங்கும் உள்ளது. அரபி மொழிச் சொல்லான ஜிஹாது என்பதன் உண்மைப் பொருளையோ இஸ்லாத்தையோ சரிவர அறிந்துணரும் வாய்ப்பைப் பெறாத சில முஸ்லிம்-