252
தரவே, அதைப் பொறுக்காது, சிறுபான்மையினரான பனீகுளாஅ மக்களைக் காக்கும் வகையிலேயே பெருங் கூட்டத்தினரைத் திரட்டி மக்காவுக்கருகில் இரவில் குழுமியிருந்ததைக் கண்டு பயந்துபோன மக்கா குறைஷிகள், அதைப் படையெடுப்பாகக் கருதி, பயந்துபோய் சரணடைந்தனர் என்பது வரலாறு.
எனவே, பனீகுளாஅ மக்களைக் காப்பதற்காகத்தான் மக்காக் குறைஷிகளின் மீது பெருமானார் படையெடுப்புப் பாவனை செய்தார்களேயன்றி, மக்காவை கைப்பற்றி ஆள வேண்டும் என்ற ஆதிக்க உணர்வோடு படைதிரட்டி போர் தொடுக்கவில்லை.
இங்கும் கூட நாம் கவனிக்க வேண்டிய இன்றியமையாச் செய்தி, தங்களின் தற்காப்புக்காகக் கூட அவர்கள் முயற்சி மேற்கொள்ளாது, ஒரு சிறுபான்மை சமூகத்தவர்களின் பாதுகாப்புக் கருதியே பெருங் கூட்டத்தைத் திரட்டி மக்கா நகர் சென்றார். இதுதான் ஜிஹாதின் பாற்பட்ட இராணுவ உத்தி அல்லது போர் உத்தி. இதுவே 'ஜிஹாதுல் அஸ்கர்' எனப்படுவதாகும்.
'ஜிஹாதுல் அக்பர்'
மற்றொன்று, 'ஜிஹாதுல் அக்பர்' என்பதாகும். 'இதற்கு மிகப் பெரிய போராட்டம்' என்பது பொருளாகும். ஜிஹாது அஸ்கரைவிட ஜிஹாதுல் அக்பர் என்பது சிறப்புமிகு ஒன்றாகும்.
இதற்கு வேறொரு வகையில் பொருள் கூறுவதென்றால் 'நம்மை நாமே எதிர்த்துப் போராடுவது; வெற்றி பெறுவது. நம்மை நாமே வெற்றி கொள்வது என்றால் என்ன?
நம் மனதை சென்றவிடமெல்லாம் செல்லவிடாமல், மனத்தை ஒருமுகப்படுத்தி, பக்குவப்படுத்தி அதனை நல்லுணர்வின்பால் திருப்புவதே நம்மை நாமே வெற்றி கொள்ள முயல்வதாகும். இதையே மெய்ஞ்ஞானியர்