பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/255

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

253

'உன்னை உன்னளவில் இறந்துவிடும்படி செய்தல்' என்பர். உன்னளவில் இறக்கும் உன் உள்ளத்தை இறைவனிடம் வாழும்படி செய்தலாகும்.

நம் உள்ளத்தில் இறையுணர்வு பூரணமாய்ப் பொங்கிப் பொழியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? சில தீய உணர்வுகள், தீய சிந்தனைகள், தீய குணங்கள் நம்மிடம் நிறைந்திருப்பதோடு சில சமயம் நம்மை ஆட்சி செய்து ஆட்டிப் படைக்கவும் செய்கின்றன. இதனால் நம் மனம் களங்கமிக்கதாக ஆகிவிடுகின்றது. இத் தீயுணர்வு, கீழ்தடைகளை மனத்தளவில் ஒழித்து, உள்ளத்தை அப்பழுக்கற்றதாக தூய்மையானதாக ஆக்கிக் கொண்டதால் அங்கே இறையுணர்வு பூத்துக் குலுங்கும்.

மனிதனின் அறிவு விளக்கத்திற்கு அடிப்படை யாயமைவன ஐம்புலன்களாகும். இதனை சம்ஸ்கிருதத்தில் ஐந்திரியங்கள் என்று கூறுவர். மனிதனின் ஐம்பொறிகளாகிய கண், காது, மூக்கு, வாய், மெய், எனப்படும் தொடுவுணர்வு ஆகிய ஐம்புலன்களும் செவ்வனே இயங்க, இவ்வைம்பொறிகளாகிய யானைகளை அறிவு என்னும் அங்குசத்தால் அடக்கி ஆள்வதே 'ஜிஹால் அக்பர்' எனும் மாபெரும் போராட்டம். இதன் அடிப்படையில் அமைவதுதான் சூஃபியிஸம் எனும் மெய்ஞ்ஞான வாழ்வு.

'மரணம் வருமுன் மரணித்துவிடு'

ஆன்மீக வாழ்வின் அடித்தளம் புலனடக்கமாகும். அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் "மரணம் வருமுன் மரணித்து விடு" என்று கூறினார்கள். இவ்வாசகம் பொருள் பொதிந்த அற்புதமான வாசகமாகும். "மரணம் வருமுன் மரணித்துவிடு" என்றால் என்ன பொருள். உன் உள்ளத்தை முழுமையாக இறைவனிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால், நீ இறப்பதற்குமுன் உன்னிடத்திலுள்ள தீய உணர்வுகள், தீய சிந்தனைகள் மேலும் உன் உள்ளத்தில் நல்லுணர்வுகள் உருவாவதற்குத் தடையாக உள்ள தடைக்