பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கண்ணை மூடிக் கொண்டு தேடுவதற்குப் பெயர்தான் தத்துவம்' என வேடிக்கையாகப் பொருள் விளக்கம் கூறினான். அதே போன்று மெய்ஞ்ஞானம் என்றால் ஏதோ ஒன்று என்று கருத வேண்டியதில்லை. மெய்ஞ்ஞானம் என்பது மனிதனை ஆய்வது, விஞ்ஞானம் என்பது உலகைப் பற்றி ஆய்வது என்று மிகச் சுருக்கமாகச் சொல்லலாம். இதைப்பற்றி பெருமானார் (சல்) அவர்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும், 'உலகத்தைப் பற்றிய அறிவு மரணத்தோடு உங்களை விட்டுப் பிரிந்துவிடும். உங்களைப் பற்றிய அறிவோ மரணத்திற்குப் பின்னரும் உங்களுக்குத் துணையாக வரும்' என அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார்கள்.

இறப்புக்குப் பின்னும் தொடரும் மெய்ஞ்ஞானம்

என்னதான் அணு ஆராய்ச்சி செய்திருந்தாலும் என்னதான் செய்தித் தொடர்புத்துறையில் புரட்சி செய்திருந்தாலும், வியக்கத்தக்க வகையில் புதிய புதிய மருந்துகளைக் கண்டுபிடித்திருந்தாலும், புதிய புதிய எந்திர நுட்பங்களைக் கண்டுபிடித்து போக்குவரத்துத் துறையில் மாபெரும் மாற்றமேற்படுத்துவதன் மூலம் உலகத்தையே ஒரு கிராமம் போல் சுருங்கிய வடிவிலாக்கிய போதிலும், அவையெல்லாம் நம் இறப்புக்குப் பின் நம்மைத் தொடர்வதில்லை. அவையெல்லாம் மரணத்திற்குப் பின் இவ்வுலக அளவில் நின்று விடுகின்றன. விஞ்ஞான ஆராய்ச்சியால் விளைந்த பயன், விஞ்ஞான முன்னேற்றத்தால் பெற்ற பயன், அதனால் நாம் பெற்ற ஆராய்ச்சியின் அரும் பெரும் பயன்கள், அறிவுப் பெருக்கம் அனைத்துமே இவ்வுலகோடு சரி. ஆனால், உங்களைப் பற்றிய அறிவானது. உங்கள் மரணத்திற்குப் பின்னரும் உங்களைத் தொடர்ந்து உங்களுக்குத் துணையாக வரும். இந்த உலகத்தில் வாழும்போது உங்களைப்பற்றிய ஆராய்ச்சி, ஆன்மீக அடிப்படையில் நீங்கள் பெறுகின்ற மெய்ஞ்ஞானப் பயன், உங்கள் மரணத்திற்குப் பின்னும் உங்களைத்