பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

259



இயற்கையாக நம் உடம்பிலுள்ள தோல்கேட்கும் ஒலிகளையெல்லாம் பதிவு செய்யக் கூடியனவாக உள்ளன. அத்தோலின் மீது ஒரு எலெக்ட்ரானிக் டிவைசை வைத்து அதனுடைய இன்னொரு முனையை காதினடியில் செவிப் பறையிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்போடு இணைத்துவிட்டால் பேசுவதெல்லாம் மூளைக்குச் செல்ல, மற்றவர் பேசுதைப் புரிந்து கொள்ள முடியும். அதனால் இதனை 'தோல் பேச்சு' எனும் பொருளில் 'ஸ்கின் ஸ்பீச்' எனப் பெயரிட்டு அழைக்கிறார் டாக்டர் ஆர்லன் கார்னீ.

இவ்வாறு இன்று புதிதுபுதிதாக கண்டுபிடிக்கும் அறிவியல் உண்மைகள் அனைத்தின் அடித்தளமும் திருமறையில் இறைவனால் தெளிவாகச் சொல்லப்பட்டிருப்பதைக் கண்டு இன்றைய ஆய்வுலகம், குறிப்பாக விஞ்ஞான உலகம் வியந்து வாயடைத்துப் போய் நிற்கிறது. திருமறையை அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆயும் போக்கு உலகெங்கும் பெருகி வருகிறது. இதனால் அறிவியல் ஆய்வுலகம் ஒரு வகையில் செழுமையடைந்து வருகிறதென்றே கூறலாம்.

ஆனால், முஸ்லிம் மக்களாகிய நாம், இஸ்லாம் சாதாரணமாக விதித்துள்ள இஸ்லாமியக் கடமைகளைக் கூட நிறைவேற்ற இயலாதவர்களாக வெறும் முஸ்லிம் பெயர் தாங்கிகளாக வாழவே முற்படுகிறோம். இஸ்லாம் எதையெல்லாம் தவிர்க்கப் பணிக்கிறதோ அதையெல்லாம் நம் சுய நல வேட்கையில் இஸ்லாமிய நெறிகளுக்குப் புறம்பாக இருந்தால் கூட அதைக் கைவிடாமல் வாழவே விழைகிறோம் என்பதை வருத்தத்துடன் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இதில் மிக முக்கியமான ஒன்றை உங்கள் முன் எடுத்துவைக்க விரும்புகிறேன்.

இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திவரும் ஈமான் அமைப்பின் தலைவர் அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு ஒரு விஷயத்தைக் கூறினார். இஸ்லாத்தில்