260
நிலவி வரும் கைக்கூலி பற்றிய பிரச்சினைதான் அது. அவர்களைப் போன்ற சமுதாயப் பெருமக்கள் இத்தகைய பிரச்சினைகளைக் கையிலெடுத்துக் கொண்டிருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்.
இன்றைய உலகின் நோக்கும் போக்கும்
இன்றைய உலகு இஸ்லாமிய நெறியை, பெருமானாரின் போதனைகளை அறிவியல் பூர்வமாக அணுக முற்பட்டுள்ளது. காலத்தை விஞ்சி நிற்கும் ஏற்றமிகு கருத்துகளை, புரட்சிகரமான சிந்தனைகளைக் கண்டு வியந்து போற்றுகிறது. அவற்றைச் செயற்படுத்தி வெற்றி காண முற்படுகிறது.
அதே சமயத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை சேர்ந்த முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாமிய நெறிப்படி வாழ்கிறோமா-வாழ முற்படுகிறோமா என்றால் 'ஆம்' என்று கூற என் 'நா' எழவில்லை. இஸ்லாத்தின் சிறப்புமிகு கொள்கைகள் பலவற்றுக்கு நேர்மாறான போக்கைக் கையாள்பவர்களாகவே இருக்கிறோம் என்பது ஒரு கசப்பான உண்மை.
சுய ஆய்வு
இந்நிலை மாற மீலாது விழாக்களிலாவது நாம் சுய ஆய்வு செய்ய முற்பட வேண்டும். அப்போதுதான் இஸ்லாமிய நெறிப்படி வாழ வேண்டிய நாம் எங்கே சறுக்கியிருக்கிறோம். எங்கெங்கே வழுக்கியிருக்கிறோம் என்பதை அறிந்துணரவும், அத்தவறான போக்குகளிலிருந்து மீண்டு, சரியான இஸ்லாமிய ராஜபாட்டைக்குத் திரும்ப வழிவகை ஏற்பட இயலும்.
மேல் மட்டம் விழித்தால் அடிமட்டமும் விழிக்கும்
இவ்விழாவுக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கும் அல்ஹாஜ் எஸ்.எம். சம்ஸ்தீன் அவர்கள்