பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/271

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

269

உணர்ந்து தெளிய இயலாத சிலர், இஸ்லாத்தைத் தவறான கண்ணோட்டத்தில் விமர்சிக்க முற்படுகின்றனர். அதற்கு அவர்கள், கையாலும் சொல் FUNDAMENTALIST எனும் சொல்லாகும். இதற்கு 'அடிப்படைவாதிகள்' என்பது சரியான பெயர்ப்புப் பொருளாகும். மற்ற சமயங்ளெல்லாம் காலப்போக்கில் செல்வாக்குப் படைத்த ஒரு சிலரின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப, மாற்ற திருத்தங்களை ஏற்றுச் சில அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுத்து மனித விருப்பங்களுக்கேற்ப மாறி விடுகின்றன.

ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை இறைநெறியாக இறைவனால் இறுதித் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் மூலம் வகுத்தளிக்கப்பட்ட வாழ்வியல் நெறியாக அமைந்திருப்பதால் தனிப்பட்ட மனித விருப்புகளுக்கு இம் மார்க்கத்தில் அறவே இடமில்லாமல் போகிறது. இறைநெறியாதலால் மாற்ற திருத்தமில்லாத தூயநெறியாக விளங்குகிறது. முஸ்லிம்கள் இறைநெறியின் அடிப்படைகளைப் பேணிக்காப்பதை உயிரினும் மேலாகக் கருதுவதால் அவர்களை அடிப்படைகளை விட்டுக் கொடுக்காத 'அடிப்படைவாதிகள்’ எனக் கூறுவதில் தவறில்லை.

என்றாலும் சிலர், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் ஏசவும் பழிக்கவும் Fundamentalist என்பதை பழமைவாதிகள் என்ற மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தி வருகின்றனர். ஆன்மீகத்தோடு அறிவியல் போதித்த அண்ணலார் வழி வாழும் முஸ்லிம்களை, இன்றைய அறிவியல் அனைத்துக்கும் அடித்தளம் அமைத்த இஸ்லாமியர்களை, பத்தாம் பசலிகள் என்னும் பொருள்பட பழமைவாதிகள் எனக் குறிப்பிடுவது விந்தையிலும் விந்தையாக உள்ளது. அன்று எகிப்து, பாபிலோன் போன்ற பகுதிகளில் முகிழ்த்தெழுந்த கணிதம், வானியல், மருத்துவம் போன்ற துறைகள் முளைவிட அவற்றிற்கு