பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/275

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

273

வெறுத்தால் அவன் முஸ்லிமே அல்ல. மதிக்க வேண்டும். இறைவன் தன் திருமறையில்,

"எம்மால் அனுப்பப்படாத இறை தூதர்கள் இல்லை” எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் எல்லா மொழியிலும் நாம் தூதர்களையும் அவர்களுக்கு வேதத்தையும் அருளியிருக்கிறோம்” என்று தெளிவாகக் கூறியுள்ளான்.

ஆனால், இறை தூதர்களின் மறைவுக்குப் பின்னர் மனிதர்கள் தங்கள் சொந்தச் சிந்தனைகளை, விருப்பு வெறுப்பு உணர்வுகளை வேதங்களில் ஏற்றி மாசுப்படுத்தியும் இறை தீர்க்கதரிசிகளின் மறைவுக்குப் பின்னர், இறந்த நபி மீது கொண்ட பற்றாலும் பாசத்தாலும் இறைத் தன்மைகளை அவர் மீது ஏற்றி இறைவனாக்கும் சூழ்நிலை ஏற்பட்ட போது, மீண்டுமொரு இறைதூதர், மீண்டும் மூல வடிவில் இறை வேதம் இறைவவனால் உலகுக்க வழங்கப் படலாயிற்று. அவ்வகையில் வந்த இறுதித் தூதரே நபிகள் நாயகம் (சல்) அவர்களும் அவர்கட்கு வல்ல அல்லாஹ் வினால் வழங்கப்பட்ட இறுதி வேதம் திருக்குர்ஆனும். அவ்விறுதி வேதத்தில் இடம் பெற்ற இறைவாக்கே,

“உங்களுக்கு உங்கள் மதம்; எங்களுக்கு எங்கள் மார்க்கம்” என்ற சமயக் கோட்பாடு.

அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். மதாச்சாரியர்களான மத தீர்க்கதரிசிகளையும் மதிக்கிறோம். அம்மதங்களைப் பின்பற்றுபவர்களையும் மதிக்கிறோம். இதில் எந்த மாறுபாடும் வேறுபாடும் இல்லை.

மாற்று மதங்கள் அல்ல; சகோதர சமயங்கள்

மாற்றுமதம் என்பதே தவறான சொற்பிரயோகமாகும். அனைத்துச் சமயங்களும் இஸ்லாம் உட்பட இறைவனால் அருளப்பட்டமையால் 'சகோதர சமயங்கள்’ என்பதே பொருத்தமான சொற்பிரயோகம் ஆகும். அனைத்துச்