பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/285

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

283

மட்டுமே கொலையாளிக்கு விடுதலைச் சலுகை வழங்க முடியும் 'எனக் கூறிவிட்டார்.

இக் கட்டளையின் விளைவாக அரசு காவலர்கள் யாருமே இவ்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. எனினும், பொது மக்களில் சிலர் சலவைத் தொழிலாளியின் மனைவியிடம் சென்று எதிர்பாரா நிலையில் உன் கணவன் இறக்க நேரிட்டது. அரசி வேண்டுமென்று இக்கொலையைச் செய்யவில்லை. மன்னரால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியை மன்னித்து விட்டதாகவும் பிணையத் தொகை தந்தால் போதும் என்று நீ கூறினாலொழிய அரசி கொலைத் தண்டனையிலிருந்து மீள வழியேயில்லை எனக் கூறி வேண்டினர்.

மனமிரங்கிய இறந்த சலவைத் தொழிலாளியின் மனவிை மன்னரிடம் சென்று, 'பிணையத் தொகை போதும், அரசியை மன்னிக்கிறேன் எனக் கூற, மன்னரும் அரசிக்குத் தண்டனையில் இருந்து விலக்கு அளித்தார் என்பது வரலாறு. எனவே, நீதியை நிலைநாட்டுவதில் சாதாரண குடிமகனிலிருந்து மாமன்னர் வரை முஸ்லிம்கள் எவ்வளவு கண்ணுங்கருத்துமாக, கண்டிப்புடன் கடைப்பிடித்து வந்துள்ளார்கள் என்பதற்கு இவ்வரலாற்று நிகழ்ச்சி ஓர் உன்னதமான சான்றாகும். நீதி நேர்மையின் அடிப்படையிலேயே இஸ்லாமிய அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைகள் வரையறுக்கப்பட்டன. ஆனால், இவற்றைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள், தவறான கருத்துகளை, உணர்வுகளை வெளிப்படுத்தத் தவறவில்லை. ஜிஹாது என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டது போலவே 'ஜிஸ்யா' வரியைப் பற்றியும் தவறான கருத்தோட்டங்களைக் கூறி இஸ்லாத்தின் மீது களங்கம் கற்பிக்க சிலர் தயங்குவதே இல்லை.

ஜகாத்துக்கு ஈடாக ஜிஸ்யா

'ஜிஸ்யா எனும் வரி முஸ்லிம் மன்னர்களால் முஸ்லிமல்லாத பிற சமயத்தவர்களிடம் கட்டாய வரியாக, கொடுமை