பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

289

ஹதீஸும் அதற்கு மூலாதாரமாக அமைந்த திருக்குர்ஆன் திருமறையும்

இறைவன் அளித்துள்ள அருட்கொடையான இந்த வாழ்வை இறைநெறியில், ஏந்தல் நபியின் இனிய வழிகாட்டுதலில் அனைத்துப் பயனும் பெற்றுய்ய முயலவேண்டும். இம் முயற்சிக்கு வேகமூட்டும் முறையில், ஆன்மீக அடிப்படையில் அறிவியல் விளக்கம் தந்து, இஸ்லாமிய நெறிமுறையின் மேன்மையை ஆய்வுகள் மூலம் அறிவுலகம் வெளிப்படுத்த விழைந்து நிற்கிறது. அதனை அறிவின் துணை கொண்டு ஏற்று, இறைவழியில் உய்திபெறுவோமாக.

(22.7.98 அன்று துபாய் கோட்டைப் பள்ளியில் அமீரக ஜமாத் சார்பில் நடைபெற்ற மீலாது விழாவில் ஆற்றிய உரைச் சுருக்கம்)