பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/292

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இஸ்லாமும் பிற சமயங்களும்

என்றுமில்லாத அளவுக்குப் பிற சமயச் சகோதரர்கள் இஸ்லாத்தை அறியவும் ஆராயவும் இன்று முற்பட்டுள்ளனர். இன்று உலகெங்கும் உள்ள அறிவாளிகள் குறிப்பாக மேற்குலகைச் சார்ந்த அறிவியலாளர்கள், அறிவியல் உணர்வோடு விஞ்ஞானப் பூர்வமாக இஸ்லாத்தை அணுகவும் ஆராயவும் முற்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.

நம் நாட்டைப் பொருத்தவரை, குறிப்பாகத் தமிழகத்தைப் பொருத்தவரை இஸ்லாமியப் பிரச்சாரம் நேரிடையாக மக்களிடம் பெருமளவில் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. இலக்கியத்தின் மூலமே பெரும்பாலும் இஸ்லாமிய நெறி விளக்கும்முறை நிலவி வந்தது என்பதை இஸ்லாமிய இலக்கிய வரலாறு உணர்த்திக் கொண் டுள்ளது. தமிழகத்தில் இஸ்லாம் பரவி நிலைபெற்றதற்குப் பெருங்காரணமாயமைந்தவர்கள் இஸ்லாமியத் தமிழ் புலவர்களும் இஸ்லாமிய மெய்ஞ்ஞானச் சூஃபிக் கவிஞர்களுமாவர் என்பது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு.

இஸ்லாம் ஆனவன் - ஆக்கப்பட்டவனல்ல

இஸ்லாம் வாள்கொண்டு, ஆட்சி, அதிகாரத் துணை