பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/294

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

292

அமைதி வழியில் எடுத்துச் சொல்ல வேண்டிய இன்றியமையாக் கடப்பாடுடையவர்களாக உள்ளோம்.

முஸ்லிமல்லாதவர்களைக் கொண்டு
முஸ்லிமல்லாதவர்களிடம்

இதை மனதில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொண்டவனாகக் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக “இஸ்லாமியப் பிரச்சாரத்தை இலக்கியங்களின் துணையோடு முஸ்லிமல்லாதவர்களைக் கொண்டு முஸ்லிமல்லாதவர்கள் மத்தியில்” செய்வதை ஒரு 'மிஷனரி ஒர்க்காகவே' செய்து வருகிறேன்.

ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறு மற்றும் மூன்றாம் ஞாயிறுதோறும் சீறாப்புராணத் தொடர்ச் சொற்பொழிவுக் கூட்டத்தை லிங்கிச்செட்டி தெருவிலுள்ள கோயிலை யொட்டியுள்ள வடலூர் இராமலிங்க வள்ளலார் பெயரில் அமைந்துள்ள திருவருள் மண்டபத்துள் தொடர்ந்து நடத்தி வந்தேன். சீறாப்புராணத் தொடர்ச் சொற்பொழிவாளர் சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்களாவார். ஒவ்வொரு கூட்டத்திற்கும் சமண, கிருஸ்தவ, சைவ, வைணவம் போன்ற பல்வேறு சமயங்களையும் சமயப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் தலைமை தாங்குவது வழக்கம். கூட்டத்திற்கு வருகை தருபவர்களில் அறுபது விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் பிற சமயச் சகோதரர்களாவர். ஆனால், பேசப்படும் பொருள் பெருமானார் (சல்) அவர்களின் வாழ்க்கையையும் வாக்கையும் விரித்துக் கூறும் உமறுப் புலவர் தந்த 'சீறாப்புராணம்' இலக்கியமாகும். ஒரு ஆண்டிற்கு மேல் நடைபெற்ற இருபத்தியேழு தொடர்ச் சொற்பொழிவுகளையும் பதிவு செய்து, பின்னர் எழுத்து வடிவாக்கி, "நெஞ்சையள்ளும் சீறா” எனும் பெயரில் 1136 பக்கங்களில் நூலாக வெளிவந்தது. 1985இல் மிகச் சிறந்த இஸ்லாமிய ஆய்வு நூல் என்பதற்கான பரிசையும் பெற்றது. இதே முறையில் சுலைமான் நபியின் வாழ்க்கையை