பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/296

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

குமாரசாமி வாசற்படியில் நின்றிருந்தார். என்னைக் கண்டவுடன் இன்று காலை ஒரு சுவையான சம்பவம் நடந்தது தெரியுமா? என்றார், சொன்னால்தானே தெரியும் என்று நான் கூறி முடிப்பதற்குள் அந்நிகழ்ச்சியை விவரிக்கத் தொடங்கினார். இன்று பக்கத்துக் கோயில் அர்ச்சகரான தீட்சிதர் வேகமாக என்னிடம் வந்தார். வந்த வேகத்தில் 'சீறாத் தொடர்ச் சொற்பொழிவுக் கூட்டம் தொடர்ந்து இங்கு நடக்குமா?’ என்று கேட்டு என் முகத்தை மிகவும் சீரியசாகப் பார்த்தார். அவர் கேள்வி கேட்ட தோரணையும் வேகமும் எனக்கு ஒரு வித அச்சத்தையே ஏற்படுத்திவிட்டது. 'அருட்பெருஞ்ஜோதி இராமலிங்க வள்ளலார் சைவ சமயப் பிரச்சாரம் செய்து வந்த திருவருள் மண்டபத்தில் இஸ்லாமியப் பிரச்சாரமா?' எனக் கேட்பது போலிருந்தது. தயக்கத்துடன் ஏன் கேட்கிறீர்கள் என்று எதிர் கேள்விபோட்டேன். அப்போது அவர் சிறிது புன் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, “எனக்கு இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாது. முஸ்லிம்கள் ஐந்து முறை நமாஸ் பண்ணுவாங்க; ஒரு மாதம் உபவாசம் இருப்பாங்க; அப்போது ஏழைகளுக்கு தானதருமம் செய்வாங்க. இதுக்குமேல் அவங்களைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. சீறாப்புராணத் தொடர்ச் சொற்பொழிவு நடந்த போது இராமலிங்க வள்ளலார் சைவ சமயப் பிரச்சாரம் செய்த திருவருள் மண்டபத்தில் ஏதோ புராணச் சொற்பொழிவு தொடங்கக் கூட்டம் நடப்பதாகக் கருதி விழாவில் கலந்து கொண்டேன். அதில் பேசிய சிலம்பொலி சு. செல்லப்பனார் உட்பட பலரும் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகத்தைப் பற்றியும் பேசினார்கள். அவர்கள் பேசியதெல்லாம் எனக்குப் புதுத் தகவல்களாக இருந்தன. இஸ்லாத்தில் எவ்வளவு நல்ல கருத்துகள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கு. அவைகளையெல்லாம் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு அதிகமாகிவிட்டது. எனவேதான் தொடர்ந்து கூட்டம் நடந்தால் தொடர்ந்து கேட்கலாமே என்ற ஆசையில்தான், தொடர்ந்து நடக்குமா? என்று