பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

295

தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என மூச்சுவிடாமல் சொல்லி முடித்தார். தொடர்ந்து நடக்கும் என்று நான் கூறியதைக் கேட்டு மலர்ந்த முகத்துடன் சென்றார் என்று கூறிச் சிரித்தார்.

இதே போன்ற மற்றொரு சம்பவம் அமெரிக்காவில் ஏற்பட்டது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. நான்டல் லாசிலிருந்து ஹலிஸ்டனை நோக்கி 'கிரேஹவுண்டு' பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன். என் அருகிலிருந்தவர் அடுத்து வந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிச் சென்று விட்டார். நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முறையில் 'யா அல்லாஹ்' எனச் சற்று உரத்துக் கூறி நெட்டுயிர்த்தேன். 'யா அல்லாஹ்' எனும் சத்தத்தைக் கேட்ட தாடிவைத்த கறுப்பர் ஒருவர் என்னருகில் காலியாக இருந்த இருக்கையில் விரைந்து வந்து அமர்ந்தபடி 'ஸலாம் அலைக்கும்' என முகமன் கூறியபடி உட்கார்ந்தார். அவரது கரிய முகத்தில் மகிழ்ச்சி, பாந்துவம் இரண்டும் கலந்த ஒரு மலர்ச்சி தெளிவாகத் தென்பட்டது. அவர் டல்லாசில் பஸ் ஏறும்போதே பார்த்தேன். ஜெபமணியை உருட்டியபடி காணப்பட்ட அவரை ஒரு கிறிஸ்தவராகவே எண்ணியிருந்தேன். நான் ஒரு முஸ்லிம் என்பதை அறிந்தவுடன் வாஞ்சையுடன் சலாம் கூறி, இடம் மாறி என்னருகில் உட்க்கார்ந்தவர் நான் ஏதேனும் பேச வேண்டும் என்பதை எதிர்பார்ப்பவர்போல் என் முகத்தை கூர்ந்து நோக்கினார். அவருக்குப் பதில் சலாம் கூறியப்படி, அவரைப் பற்றி அறிய விரும்பிக் கேட்டதற் கெல்லாம் பதில் கூறி வந்த அவரிடம் “நீங்கள் எப்போது முஸ்லிம் ஆனீர்கள்? அதற்கு என்ன காரணம்? உங்கள் குடும்பத்தவர் யாராவது அரபு நாடுகளில் வேலை செய்கின்றார்களா?” என்று கேட்ட உடனே அவர், “எங்கள் குடும்பத்தில் யாருமே அமெரிக்காவை விட்டு வெளியே போனதில்லை. ஒரு முறை பாக்ஸர் முஹம்மதலியின் பேச்கைக் கேட்டேன். அவர் இஸ்லாத்தைப் பற்றி அதன்