பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/309

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இஸ்லாமும் தாய்மொழியும்

உலக மக்களுக்கு இறைநெறிபுகட்ட வந்த இறை தூதர்களில் - நபிமார்களில் அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமான கல்வி பற்றி நபிகள் நாயகம் (சல்) அவர்கள் அளவுக்கு வலியுறுத்திக் கூறியவர் வேறு எவரும் இலர்.

'உம்மி' நபியாக -ஓரெழுத்தும் கற்காதவராக இருந்தும் அறிவுலகின் தலைவாசலாக விளங்கவல்ல கல்வி குறித்த பெருமானாரின் கருத்துகளைக் கண்டு இன்றைய அறிவுலகம் எண்ணி எண்ணி வியந்து போற்றுகிறது.

நபிகள் நாயகம் (சல்) அவர்களை இறுதி நபியாக இறைவன் தேர்ந்தெடுத்தபோதே, அவருக்கு அறிவு புகட்ட, கல்வி கற்பிக்க ஒரு மனிதரை ஏற்பாடு செய்து விடக் கூடாது என்பது இறைநாட்டமாக இருந்தது ஏன்? இறுதி நபியாக நாளை உலா வரும்போது, இறைச் செய்தியை மக்களுக்குக் கூறும்போது, அண்ணலார் இவ்வளவு அரிய செய்திகளைச் சொல்லுவதற்கு யார் காரணம் தெரியுமா? அவருக்கு ஆசிரியராயிருந்தவர் கொடுத்த அறிவு, அவர் சொன்ன விஷயங்களைச் சிறிது மாற்றி, திருத்தி இறுதி வேதம் எனக் கூறுகிறார் என்ற நிலைவந்துவிடக் கூடாது. ஏனென்றால், அவர் மூலம் இறைவன் இறுதி வேதத்தை உலகுக்கு வழங்கவிருக்கிறான். அதில் எக்காரணம் கொண்டும் மனிதத்